உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

அவை வருமாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

  • “குழலிசைக் குரல தும்பி குறைத்த

குண்டுசுனைக் குற்ற மாயிதழ்க் குவளை

குலைவேற் குறவன் பாசிலைக் குளவியொடு *குறிநெறிக் குரல்வகுத் தடைச்சிய

குறிஞ்சிசூழ் குவட்டிடைச் செய்தநம் குறியே”

இது மூன்றாஞ்சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்றுசீர்க் கண்ணும் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், கீழ்க்கதுவாய் மோனை.

66

(நேரிசை வெண்பா)

'அடும்பின் நெடுங்கொடி ஆழி எடுப்பக்

கடுந்தேர் நெடும்பகற் றோன்றும் - கொடுங்குழாய்! பாடுவண் டாடும் பனிமலர் நீடுறை

நாடுவாம் கூடும் பொழுது’

وو

இது மூன்றாஞ்சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்றுசீர்க் கண்ணும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், கீழ்க்கதுவாய் எதுகை.

66

(நேரிசை ஆசிரியப்பா)

'விரிந்தும் சுருங்கியும் வில்லென ஓசிந்தும் குவிந்தும் மலர்ந்தும் குலையுறக் குலாவியும் பெருகியும் சிறுகியும் *பின்னெறி நின்றும் *இருந்தோள் உண்கண் மலர்ந்தும்

பொருந்தா பொருந்திய புருவம்புடை பெயர்ந்தே”

6 எனவும்,

66

'கருங்கண் வெள்வளை வார்குழைச் சேயிழை

இரும்பும் பொன்னும் இயல்காழ் மணியும்

எனவும் இவை மூன்றாஞ்சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மறு தலைப்படத் தொடுத்தமையால், கீழ்க்கது வாய் முரண்.

(பா. வே) *குழலிசை குரற்றும்பி குறைந்த *குறுநெறிக்.

(பா. வே) *பின்னை நிமிர்ந்தும். *இருந்து முண்கண் மலர்ந்தும் பொருந்தா, பொருந்திய புருவம் புடைபெயர்ந் தனவே.