உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

(தரவு கொச்சகம்)

'அன்னையும் என்னையும் தன்னில் கடியும் பன்னாளும் பாக்கமும் ஓவா தலர் தூற்றும் பூக்கமழும் மெல்லம் புலம்பன் பிரியினும் இன்னுயிர்யாம் இன்னும் இறந்தி ரேமுளேம்’

205

இது 'மூன்றாஞ்சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்றுசீர்க் கண்ணும் ஈற்றெழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், கீழ்க் கதுவாய் இயைபு.

66

(நேரிசை ஆசிரியப்பா)

“ஆஅம் பூஉ மணிமலர் தொடாஅ

யாஅம் தேஎம் தண்புனம் தழாஅம்

நாஅம் குறியிடை நண்ணும்

தேஎ மாஅம் பொருப்பிடை எனாஅ

இது மூன்றாஞ்சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்று சீர்க் கண்ணும் அளபெழுந்தமையால், கீழ்க்கதுவாய் அளபெடை.

66

அஃதே எனின்,

“ஈற்றயற் சீரொழித் தெல்லாம் தொடுப்பது கீழ்க்கதுவாய் ஆகும்”

என்றாலும், கருதிய பொருளைப் பயக்கும். 'கிழமைய தாகும்,” என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை? எனின் கையனார் முதலாகிய ஒருசார் ஆசிரியர் இரண்டாஞ் சீர்க்கண் இல்லாததனைக் ‘கீழ்க்துவாய்' என்றும் மூன்றாஞ் சீர்க்கண் இல்லாததனை “மேற்கதுவாய்' என்றும் வழங்குவர் என்பது அறிவித்தற்கு ஒரு தோற்றம் உணர்த்தியது எனக் கொள்க.

முற்றுத் தொடை

(கரு)

48. சீர்தொறும் தொடுப்பது முற்றெனப் படுமே. என்பது என் நுதலிற்றோ?" எனின், முற்றுத் தொடை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ.ள்)

ள்) நான்கு சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுத்தவை முற்று மோனை, முற்று எதுகை, முற்று முரண், முற்று இயைபு, முற்று அளபெடை என்று சிறப்பித்துச் சொல்லப்படும் என்றவாறு

1. மேற்கதுவாய் இயைபு பற்றிய குறிப்பினைக் காண்க.