உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

“சீர்தொறும் தொடுப்பது முற்று,' என்னாது, ‘முற்றெனப் படுமே' என்று சிறப்பித்தது,

“கரியவும் வெளியவும் செய்யவும் பசியவும்"

என்றாற்போல முற்றும் முரணாது, முதலிரு சீரும் முரணிப் பின்னைக் கடை இரு சீரும் மற்றொருவாற்றான் முரணினும் முற்று முரணேயாம் என்றற்கும், தணை முதலாகிய விகற்பமும், கடையிணை முதலாகிய விகற்பமும் அடிதோறும் வருவது சிறப்புடைத்து, ஓரடியுள்ளும் வரப்பெறுமாயினும் என்றற்கும் எனக் கொள்க.

66

“விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும்”

என்ப ஆகலின்.

"மூன்றுவரிற் கூழை; நான்குவரின் முற்றே" என்றார் பிறரும் எனக் கொள்க.

அவை வருமாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

"அணியிழை அமைத்தோள் அம்பசப் படைய அரிமதர் அலர்க்கண் அரும்பனி அரும்ப

அரும்பொருட் ககன்ற அறவோர்

அருளிலர் அற்பின் அழியுமென் அறிவே"

இஃது எல்லாச்சீர்க்கண்ணும் முதலெழுத்து ஒன்றி வரத்தொடுத்தமையால், முற்று மோனை.

(நேரிசை வெண்பா)

“கல்லிவர் முல்லையும் மெல்லியலார் பல்லரும்பும் *புல்லார்ந்து கொல்லேறு நல்லானைப் - புல்லின பல்கதிரோன் எல்லைக்கட் செல்லுமா றில்லைகொல் *சொல்லியலார் சொல்லிய சொல்?”

இது சீர்தொறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வந்தமையால்,

முற்று எதுகை.

(நேரிசை ஆசிரியப்பா)

“நெடுந்தோட் குறுந்தொடி வீங்கு பிணி நெகிழ அரும்பொருள் எளிதெனச் சென்றவர் வருதல்

(பா. வே) *புல்லருந்து. *சொல்லியார்.