உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

காரிகைக் குளத்தூர் மன்னவன் தொண்டை காவலன் சிறுகுன்ற நாட்டுக்

கற்பக மிழலை நாட்டுவே ளாண்மை

கொண்டவன் கண்டன்மா தவனே'

7

முதற் கல்வெட்டுச் செய்யுள் குலோத்துங்கன் 38 ஆம் ஆட்சியாண்டிலும், இரண்டாம் செய்யுள் அவன் 46 ஆம் ஆட்சியாண்டிலும் எழுந்தனவாம்.

குலோத்துங்கன் என்னும் பெயருடன் மூவர் விளங்கி யுள்ளனர். அவருள் முதற் குலோத்துங்கனே நெடுங்காலம் ஆட்சி புரிந்தவன் (கி.பி. 1070-1120). இரண்டாங் குலோத்துங்கன் கி.பி. 1133-1150) மூன்றாங் குலோத்துங்கன் (கி.பி. 1178-1218) ஆகிய இருவரும் 46 யாண்டுகள் கடந்த நெடுங்காலம் ஆண்டனர் அல்லர். அதனால் இக்கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்ற வேந்தன் முதற் குலோத்துங்கனே என்பது வெளிப்படை.

66

ன்

‘முதற் குலோத்துங்கன் காலத்து வாழ்ந்தவன் கண்ட மாதவன் என்பான். அவன் சோழன் தலைமையில் குளத்தூர் மன்னனாக (தலைவனாக) விளங்கினான்; அவன் காலத்தில் குளத்தூர் காரிகைக் குளத்தூர் என வழங்கப் பெற்றது; அவன் முன்னோருள் ஒருவன் அமிதசாகர முனிவரைக் குளத்தூர்க்கு அழைத்து இருக்கச் செய்து காரிகை நூல் இயற்றச் செய்தான். அச்சிறப்பால் அவ்வூர் ‘காரிகைக் குளத்தூர்' எனப் பெயர் பெற்றது; காரிகைக் குளத்தூர் செயங்கொண்ட சோழ மண்டலத்துச் சிறுகுன்றநாட்டு மிழலையைச் சேர்ந்த ஊராக இருந்தது” என்பனவும் பிறவும் இக்கல்வெட்டுச் செய்யுள்களால் அறியப் பெறுகின்றன.

அமிதசாகரர் காலம் :

கண்டன் மாதவன் முன்னோருள் ஒருவன் காரிகை செய் வித்தபடியால் அவன் முதற் குலோத்துங்கன் காலத்திற்கு முற்பட்டவனே ஆவன். அன்றியும் தொண்டை நாடு ‘செயங் கொண்ட சோழ மண்டலம்' என்று குறிக்கப் பெறுவது நோக்கத் தக்கது. செயங்கொண்ட சோழன் என்பவன் முதல் இராசராசன். அவன் பெயராலேயே செயங் கொண்ட சோழ மண்டலம் என்னும் பெயரைத் தொண்டை நாடு பெற்றது. ஆதலால், அவ் விராச ராசன் காலத்திலேயே அமிதசாகரர் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாம். அவன் ஆட்சிக் காலம் கி.பி. 985-1014 என்க.