உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

இனி வேறொரு வழியாலும் இச்செய்தி உறுதியாம். அமிதசாகரர் ஆசிரியர் பெயர் குணசாகரர் என்பது. “தனக்கு வரம்பாகிய தவத்தொடு புணர்ந்த குணக்கடற் பெயரோன்" என்று யாப்பருங்கலப் பாயிரம் குறிப்பதும், “தனக்கு எல்லை தானே ஆகிய துறவொடு பொருந்திய குணசாகரப் பெயரோன்" என விருத்தியுரை கூறுவதும் அறிக.

அமிதசாகரர் நாடு

L மாறஞ்சடையன் என்னும் பாண்டியனது மூன்றாவது ஆட்சியாண்டுக் கல்வெட்டுக்கள் இரண்டு பாண்டி நாட்டுக் கழுகுமலையில் உள்ளன. அவற்றுள் குணசாகரர் என்னும் சமண சமய ஆசாரியர் ஒருவர், தம் கோட்பாடுகளைப் பரப்பு வதற்காகப் பரப்புநர் சிலரை நியமித்து அவர்களின் உணவுக்காக நிலக்கொடை புரிந்த செய்தி கூறப் பெற்றுள்ளது. அதில் வீரநாராயணன், உத்தமசீலன் என்னும் பெயர்கள் வருகின்றன. வை முதற் பராந்தகசோழனையும், உத்தமசோழனையும் குறிப்பன. அவர்கள் காலம் முறையே கி.பி. 907 - 953; 970-985. ஆதலால், அவர்களுக்குப்பின் ஆட்சிக்கு வந்த முதல் இராசராசன் காலத்தில் (985-1014) குணசாகரரின் மாணவரான அமிதசாகரர் வாழ்ந்தார் என்பது கொள்ளத்தக்கதேயாம்.

‘அமிதசாகர முனியைச் சயங்கொண்ட சோழ மண்டலத்துத் தண் சிறு குன்ற நாட்டகத்து இருத்தி' என்னும் நீடூர்க் கல் வெட்டுச் செய்தியால் அமிதசாகரர் வேற்று நாட்டினர் என்றும், அவரைத் தம் நாட்டகத்து எழுந்தருளச் செய்து குளத்தூரில் ருக்கச் செய்தவன் கண்டன் மாதவன் முன்னோன் என்பதும் விளங்குகின்றன. கழுகுமலைக் கல்வெட்டால் குணசாகரர் பெயர் அறியப் பெறுதலாலும் தம் சமயக் கோட்பாட்டைப் பரப்புதற்குச் சிலரைப் பிற நாடுகளுக்கு விடுத்தார் என்பது தெரிதலாலும் பாண்டி நாட்டில் இருந்து வந்தவர் அமிதசாகரர் என்பது அறியத் தக்கது. “காரிகையின் அவையடக்கச் செய்யுளும் அமிதசாகரர் பாண்டி மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பதை வலியுறுத்தும்” என்பர்.

1. அமிதசாகரர் நாடு அவருடைய ஆசிரியர்க்குரிய பாண்டி மண்டலமே எனலாம். அவ்வபிமானம்பற்றிப் போலும் தொண்டை நாட்டில் இருந்து இயற்றிய காரிகை நூலை ஆண்டு அரங்கேற்றாது ‘தேனார் கமழ்தொங்கல் மீனவன் கேட்ப அப்பாண்டியனது அவைமுன்பு இம் முனிவர் அரங்கேற்றிய தென்க. மீனவன் கேட்ப என்பதிலுள்ள வினை எச்சத்தை அருந்தவன் சொன்ன கன்னித் தமிழ் என்பதனுள் சொன்ன என்ற வினையுடன் கூட்டியும் பொருள் கூறலாம். ஆயினும் கேட்போர், களம் என்ற பாயிர விலக்கணம் அதனால் அமையாமையின் அஃது ஏற்புடைத்தன்று என்க. சாசனத் தமிழ்க் கவிசரித.பக்:44.