உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

ஈண்டு வேண்டப்படும் செய்யுள் என்பதூஉம் சொல்லப் படும் எனக் கொள்க.

"மெய் பெற' என்று மிகுத்துச் சொல்லிய அதனால், செய்யுள்கள் இடத்தினானும், தொழிலினானும், பொழுதி னானும், பிறவாற்றானும் பெயர் பெற்று நடப்பனவும் உள எனக் கொள்க.

அறம், பொருள், இன்பம், வீடு என இவற்றைப் பாவி நடத்தலின் ‘பா’ என்பதூஉம் காரணக்குறி; ஒருபுடையாற் பாவினோடு ஒத்த இனத்தவாய் நடத்தலின், 'பாவினம்' என்ப தூஉம் காரணக்குறி. இவற்றை ‘இடுகுறி’ எனினும் இழுக்காகாது. பாக்களின் பெயர் வேறுபாடு

ருரு. வெண்பா ஆசிரியம் கலியே வஞ்சியெனப் பண்பாய்ந் துரைத்த பாநான் காகும்.

(க)

இஃது என் நுதலிற்றோ?' எனின், நிறுத்த முறையானே பாக்களது பெயர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

(இ.ள்) வெண்பாவும், ஆசிரியப்பாவும், கலிப்பாவும், வஞ்சிப்பாவும் எனத் தத்தம் தன்மையால் தெரிந்து சொல்லப் பட்ட பா, நான்கு வகைப்படும் என்றவாறு.

ஏகாரம், எண்ணேகாரம் 'கலியே' என்ற வழியதால், ஏகாரம் ஒழிந்த வழி இல்லையால், அஃது யாங்ஙனம் எண்ணுமோ?' எனின், ஒரு வழி நின்றேயும் ஒழிந்தவற்றைக் ரு கொள்ளும். என்னை?

66

“எண்ணே காரம் இடையிட்டுக் கொளினும் எண்ணுக்குறித் தியலும் என்மனார் புலவர்"

தொல். இடை. 40

என்பது இலக்கணம் ஆகலின், 'நான்கு' என்றது என்னை? எண்ணேகாரத்தால் எண்ணப்பட்ட நான்கும் என்பது பெறலாம் அன்றோ?' எனின், ஆம்; ஆயினும், அது நூல்நடை எனக் கொள்க. என்னை?

“கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென் றம்மூன் றென்ப மன்னைச் சொல்லே”

66

‘ஓதல் காவல் பகைதணி வினையே

வேந்தற் குற்றுழி பொருட்பிணி பரத்தையென் றாங்கவ் வாறே அவ்வயிற் பிரிவே

எனப் பிறரும் சொன்னார் எனக் கொள்க.

தொல். இடை. 4.

இறையனார். 35.

'வெண்பா ஆசிரியம் கலியே வஞ்சியெனப் பாநான்கு ஆகும்,' என்னாது, ‘பண்பாய்ந் துரைத்த பாநான் காகும்,' என்

று