உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

யாப்பருங்கலம்

காரணக்குறியான் வழங்குமாறு:

(வெண்பா)

243

வேற்று வண்ணம் விரவாது தூய்மை பெற்ற வெள்ளை வண்ணம் எல்லா வண்ணத்துள்ளும் சிறப்புடைத்து. அவ்வாறே, வேற்றுத் தளையும் அடியும் விரவாது தூய்மை பெற்று எல்லாப் பாவினுள்ளும் சிறப்புடைத்து ஆகலின், 'வெள்ளை' என்பது காரணக்குறி; திருவே போலச் சிறப்புடையாளைத் என்றாற்போலக் கொள்க.

(ஆசிரியப்பா)

திரு

சீரினானும் பொருளினானும் ஓசையினானும் ஆகிய நுண்மையைத் தன்கண் நிறுவிற்றாகலானும்,

புறநிலை வாழ்த்து முதலாகிய பொருள்களை ஆசிரியனே போல நின்று அறிவிக்கும் ஆகலானும், 'ஆசிரியம்' என்பதும் காரணக்குறி. ஆசு' எனினும், 'சிறிது' எனினும், 'நுண்ணிது' எனினும் ஒக்கும்.

(கலிப்பா)

சீர், பொருள், இசைகளால் எழுச்சியும், பொலிவும், கடுப்பும் உடைமைத் தாகலின், 'கலி' என்பதும் காரணக்குறி. கலித்தல் கன்றல் கஞறல் பம்மல் எழுச்சியும் பொலிவும் எய்தும் என்ப

6

66

எனவும்,

وو

“கம்பலை சும்மை அழுங்கல் கலிமுழக் கென்றிவை எல்லாம் அரவப் பெயரே

2

எனவும், சொன்னாராகலின்.

99

(வஞ்சிப்பா)

குறளும் சிந்தும் அல்லாத அடிகளை எல்லாம் வஞ்சித்து வருதலானும், புறநிலை வாழ்த்தும் வாயுறை வாழ்த்தும் அவையடக்கியலும் செவியறிவுறூஉம் என்றிப் பொருள்களை வஞ்சித்து வருதலானும், வஞ்சிக் கொடிபோல் நேர்ந்து நிற்றலானும், வஞ்சி என்னும் திறமே போலும் வனப்பும் ஏர்பு முடைத்தாகலானும், 'வஞ்சி' என்பதும் காரணக்குறி.

இவை எல்லாம் ஒருபுடை ஒப்பினாற் பெயர் பெற்றன எனக் கொள்க. ஒன்றுக்கு ஒன்று சிறப்புடைமையின், 'வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி' என்று இம்முறையே பாற்படுத்து வைத்தார் எனக் கொள்க. 'வெள்ளை' என்றும், ‘பா’ என்றும் நின்று ‘வெண்பா' என்று முடிந்தது எனக் கொள்க.

1. விரைவு. 2. ஒலியின் பெயர்.