உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

வேதியர், அரசர், வணிகர், சூத்திரர் என்னும் சாதிமேல் சார்த்தி வழங்குவாரும் உளர் எனக் கொள்க.

“வெண்பா முதலாம் நால்வகைப் பாவும் எஞ்சா நாற்பால் வருணக் குரிய'

66

99

‘பாவினத் தியற்கையும் அதனோ ரற்றே”

என்றார் வாய்ப்பியம் உடையார் ஆகலின்.

-யா. வி. 95. மேற்.

வெண்பாவினை வன்பா' என்றும், ஆசிரியப்பாவினை 'மென்பா' என்றும், கலிப்பாவினை ‘முரற்கை' என்றும் வழங்குப. (நேரிசை வெண்பா)

“வெண்பா முதலாக வேதியர் ஆதியா

மண்பால் வகுத்த வருணமாம்; - ஒண்பா

இனங்கட்கும் இவ்வாறே என்றுரைப்பர் தொன்னூல் 2மனந்தட்பக் கற்றோர் மகிழ்ந்து”

இதனை விரித்துரைத்துக் கொள்க.

யா. வி. 95. மேற்.

இன்னும், 'வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி' என்னும் 3கிடக்க்ைகு ஒருசார் ஆசிரியர் உரைக்குமாறு:

நாற்சீரடியான் நடைபெறுதலும், வேற்றுப்பாவினால் இறாமையும், எல்லாப் பொருண்மேலும் சொல்லப்படுதலும் என்று இவ்வாற்றால் ஆசிரியத்தோடு ஒத்தலும், உயர்ந்த ஓசைத்தாகலும், உத்தம சாதி ஆகலும், வேற்றுத்தளையும் வேற்றுப்பாவும் விரவாமையும், என்னும் மிகுதிக்குணம் உடைமை நோக்கி, வெண்பா ஆசிரியப்பாவின் முன் வைக்கப் பட்டது.

அளவடியால் நடைபெறுதலும், தனது நடையால் தான் னிது இறுதலும், எல்லாப் பொருள்களையும் தன்கண்ணே அடக்கலும், ஒருவாத பொருளிற்றாதலும் ஒருபுடையால் வெண்பாவோடு ஒத்தலும், அகவிய ஓசைத் தாகலும், அரசர் குலத்தினதாகலும், வேற்றுத்தளையும் அடியும் விரவி வருதலும் என்னும் வேறுபாடு உடைமை நோக்கி வெண்பாவின் பின் வைக்கப்பட்டது ஆசிரியப்பா.

நேரடியால் நிலைபெறுதலும், அயலடியும் அயற்றளையும் விரவி வருதலும், இவ்வாற்றான் ஆசிரியத்தோடு ஒத்தலும், அயற்பாவினால் இறுதலும், புறநிலை வாழ்த்து முதலிய

1. வன்பா, மென்பா என்பவை பாடுதல் அருமை எளிமை கருதிய குறியாகலாம். முரலுதல், முரற்றல் என்பவை ஒலித்தல் பொருளன. கலி' என்பதும் அப்பொருளதே என்பதை முன்னே காட்டினார். 2. மனங்குளிர; அஃதாவது நிரம்ப. 3. வைப்புமுறை.