உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

245

பொருள்கண்மேற் புகாமையும், வணிகர் குலத்தின தாகலும், துள்ளல் ஓசைத்தாகலும், நோக்கி ஆசிரியத்தின் பின் வைக்கப் பட்டது கலிப்பா.

புறநிலை வாழ்த்து முதலிய பொருள்கண்மேற் புகாமையும், அயற்றளையும் அயலடியும் விரவி வருதலும், அயற்பாவினால் இறுதலும் என்றிவற்றாற் கலிப்பாவினோடு ஒத்தலும், நாற் சீரடியால் வாராமையும், சூத்திர குலத்தினதாகலும், தூங்கல் ஓசைத்தாகலும், அகப்பொருண்மேல் அருகியன்றி வாராமையும் நோக்கிக் கலிப்பாவின் பின் வஞ்சிப்பா வைக்கப்பட்டது.

அல்லதூஉம், எடுத்துக்கொண்ட இனவெழுத்து இரண்டா மடி முதற்கட் பெற்றும், இடையிட்டெதுகை பெற்றும், பெறா தும் வந்தது ஒருசார் ஈரடி வஞ்சிப்பா இரண்டடியை உடன் கூட்டி இடையறாமை அசைத்து உச்சரிப்ப எழுத்தும் எதுகையும் பெற்றும் பெறாதும் வந்த ஒலித்தொடர்ச்சியால் கலிப்பா அடியாய்க் கைகலத்தலும், அனுவும் அடியெதுகையும் பொழிப் பெதுகையும் பெற்றும் பெறாதும் வந்த கலிப்பா அடியினைக் கண்டித்து இரண்டாக்கிக் கால இடையீடும் கடைபற்றியது காகூவும்பட உச்சரிப்பத் துள்ளல் ஓசை வழுவித் தூங்கல் ஓசைத்தாய் வஞ்சித்தலும் உடைத்தென்று கலியும் வஞ்சியும் ஒருங்கு வைக்கப்பட்டன என்ப. அவர் காட்டும் உதாரணம்: “தாழிரும் பிணர்த்தடக்கைத் தண்கவுள் இழிகடாத்துக் காழ்வரக் கதம்பேணாக் கடுஞ்சினத்துக் களிற்றெருத்தின்”

6

66

எனவும்,

- யா. வி. 31. 93.95.மேற்.

“ஓங்குதிரை வியன்பரப்பின் ஒலிமுந்நீர் வரம்பாகத் தேன்தூங்கும் 'உயர்சிமய மலைநாறிய வியன்ஞாலத்து”

6 எனவும் கொள்க. பிறவும் அன்ன.

663

(நேரிசை வெண்பா)

- மதுரைக்காஞ்சி 1.4.

'அறமுதனான் கென்றும் ‘அகமுதனாள் கென்றும் திறனமைந்த செம்மைப் பொருண்மேல் - குறைவின்றிச் செய்யப் படுதலாற் செய்யுள் ; செயிர்தீரப் பையத்தாம் 'பாவுதலாற் பா

99

இதனைப் பிரித்துரைத்துக் கொள்க.

1. உயர்முகடு. 2. மலைவிளங்கிய. 3. அறம்பொருள் இன்பம் வீடு. 4. அகம், புறம், அகப்புறம், புறப்புறம். 5. பரவுதல்.