உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

பாவினங்களின் பெயரும் வழங்கும் முறையும்

ரு௬. தாழிசை துறையே விருத்தம் என்றிவை

பாவினம் பாவொடு பாற்பட் டியலும்.

இஃது என் நுதலிற்றோ?" எனின், நிறுத்த முறையானே பாவினங்களது பெயர் வேறுபாடும், அவற்றை வழங்கும் முறைமையும் உணர்த்துதல் நுதலிற்று.

(இ.ள்) தாழிசையும் துறையும் விருத்தமும் என்றிம் மூன்றும் 'பாவினம்' எனப்படும். இவை பாவினோடும் கூடிப் பெயர் பெற்று நடக்கும் என்றவாறு.

பாவினோடும் கூடி வழங்குமாறு: வெண்டாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம் எனவும்; ஆசிரியத்தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரியவிருத்தம் எனவும்; கலித்தாழிசை, கலித்துறை, கலிவிருத்தம் எனவும்; வஞ்சித்தாழிசை, வஞ்சித் துறை, வஞ்சி விருத்தம் எனவும் இவ்வாறு வழங்கப்படும். இவற்றுக்குச் செய்யுள், போக்கித் தத்தம் இலக்கணச் சூத்திரத் துள்ளே காட்டுதும்.

பிறரும் பாவினங்கட்கு இவ்வாறே சொன்னார். என்னை? “வெண்பா விருத்தம் துறையொடு தாழிசை என்றிம் முறையின் எண்ணிய மும்மையும் தத்தம் பெயரால் தழுவும் பெயரே”

என்றார் காக்கைபாடினியார்.

“பாவே தாழிசை துறையே விருத்தமென நால்வகைப் பாவும் நானான் காகும்'

என்றார் சிறுகாக்கைபாடினியார்.

“வெண்பாத் தாழிசை வெண்டுறை விருத்தமென் றிந்நான் கல்ல முந்நான் கென்ப

என்றார் அவிநயனார்.

66

ஒத்தா ழிசைதுறை விருத்தம் எனப்பெயர் வைத்தார் பாவினம் என்ன வகுத்தே”

என்றார் *மயேச்சுரர்.

ஒருபுடையால் தத்தம் பாவினோடு ஒத்தலானும் ஒத்த தாழத்தால். இசைத்தலானும், ஒத்த பொருண்மேற் பெரும் பான்மையும் மூன்றாய்த் தாழ்ந்திசைத்தலானும்,

எல்லா

(பா. வே) *திரிபுரமெரித்த விரிசடை நிருத்தர் பேர்மகிழ்ந்த பேராசிரியர்; திரிபுரமெரித்த எரிசுடர்க் கடவுளின் திருப்பெயர் மகிழ்ந்த தொன்னூற் கவிஞர்.