உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

247

வடியானும் ஒத்து நடத்தலானும் ‘தாழிசை’ தாழிசை' என்பதூஉம் காரணக்குறி.

ஒருபுடையால் தத்தம் பாவிற்குத் துறை போன்று நெறிப்பாடு உடைத்தாய்க் கிடத்தலானும், எல்லாத் துறை மேலும் இனிது நடத்தலானும், ‘துறை’ என்பதூஉம் காரணக்குறி. ஒருபுடையால் தத்தம் பாவினோடு ஒத்த ஒழுக்கத்தானும் ‘எல்லா அடியும் ஒத்து நடத்தலானும், புராணம் முதலாகிய விருத்தம் உரைத்தலானும், 'விருத்தம்' என்பதூஉம் காரணக்குறி. இது வட மொழித்திரிசொல் எனக் கொள்க.

வை ஒருபுடை ஒப்புமை வரலாற்று முறையாற் பெயர் பெற்றன எனக் கொள்க.

பாவினங்களை 'விருத்தம், துறை, தாழிசை’ என்று காக்கை பாடினியார் வைத்த முறையானே வையாது, ‘தாழிசை, துறை, விருத்தம்' என்று தமது மதம் படுத்து முறை பிறழச் சொன்னா ரல்லர் இந்நூலுடையார் ; சிறுகாக்கை பாடினியார் முதலாகிய ஒரு சார் ஆசிரியர் வைத்த முறைபற்றிச் சொன்னாராகலின், குற்றம் இல்லை என்று கொள்க.

(நேரிசை வெண்பா)

“விருத்தம் வியன்துறை தாழிசையென் றோதா தொருத்'திறுதி யாதியா ஓத- உரைப்பிற் சிறுகாக்கை பாடினியார் செப்பக்கேட் டஃது மறுத்தாரே வண்மையால் வைத்து'

'பண்ணும் திறமும் போற் பாவும் இனமுமாம் ; வண்ண விகற்ப வகைமையால் - பண்மேல் திறம்விளரிக் கில்லதுபோற் செப்பல் அகவல் இசைமருட்கும் இல்லை இனம்” இதனை விரித்துரைத்துக் கொள்க.

வெண்பா

ருஎ. செப்பல் இசையன வெண்பா; மற்றவை அந்தடி சிந்தடி ஆகலும், அவ்வடி

அந்தம் அசைச்சீர் ஆகலும் பெறுமே.

1. இறுதிக்கண் நிற்கும் தாழிசையை முதற்கண் ஓத. 2. வெண்பாவும் அகவலும் இணைந்து வரும் மருட்பாவுக்கு.

(151)