உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

இஃது என் நுதலிற்றோ’ எனின், அதிகாரம் பாரித்த பாக்களுள் நிறுத்த முறையானே ‘வெண்பா' ஆமாறு பொது வகையால் உணர்த்துதல் நுதலிற்று.

இள்) செப்பல் இசையன வெண்பா - செப்பல் ஓசையைத் தனக்கு ஓசையாக உடைய ஐந்து வெண்பாவும்; மற்றவை அந்தடி சிந்தடி ஆகலும் அவ்வடி அந்தம் அசைச்சீர் ஆகலும் பெறுமே- அவ்வெண்பாக்கள் ஈற்றடி முச்சீராகியும், அவ்வீற்றடியின் இறுதி அசைச்சீராகியும் சீர்ச்சீர் ஆகியும் நிற்கப் பெறும் என்றவாறு.

66

“அசைச்சீர் ஆகலும் பெறும்' என்ற உம்மையால் '“சீர்ச்சீர் ஆகலும் பெறும்,' என்று சொல்லப்பட்டது.

66

""

'அந்தடி சிந்தடியாகிய அடி என்னாது, ஆகலும்’ என்ற உம்மை விதப்பினால், ஆண்டு அசைச்சீராய் வரு கின்றுழி, தனிக்குறில் நேரசையும் நெடிலுடைய நிரையசை வரு

யும் வருதல் ல் சிறப்பில்லை. அல்லது சீர்ச்சீராய் கின்றுழி, ஆண்டு இயற்சீரன்றி வாரா. வாரா. அவைதம்முள் நேர்நேர் ஆகிய சீரும் நிரைநேர் ஆகிய சீரும் அன்றி வாரா. அவைதாம் உகர ஈறாய் அன்றி வாரா. அவற்றுட் குற்றிய லுகரம் ஈறாய் வருவது சிறப்புடைத்து. முற்றியலுகரம் ஈறாய் வரினும் பெரியதோர் சிறப்பில. அவைதாம் அருகியன்றி வாரா எனக் கொள்க. அவற்றிற்கு உதாரணம், 'காசு, பிறப்பு' என வரும். வெண்பாவின் இறுதிச் சீர்க்கு உகரம் ஈறாக வேறு உதாரணம் காட்டி, அலகிட்டு ஓசையூட்டும் பொழுது பிற வாய்பாட்டான் ஓசையூட்டல் ஆகாது ஆகலின், எனக் கொள்க. அவ்வாறு ஓசையூட்டுமாறு:

(குறள் வெண்பா)

“கொல்லா நலத்தது நோன்மை ; பிறர்தீமை

சொல்லா நலத்தது சால்பு”

என்பதனை அலகிட்டு,

- திருக்குறள் 984.

"தேமா கருவிளம் தேமா புளிமாங்காய் தேமா கருவிளம் காசு

எனவும்,

1. சீரே சீராக வருதல். 2. நோன்பு.