உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

கோரசைச் சீரும் ஒளிசேர் பிறப்பும்ஒண் காசும்இற்ற சீருடைச் சிந்தடி யேமுடி வாமென்று தேறுகவே எனவும் இவற்றை விரித்து உரைத்துக்கொள்க. (கட்டளைக் கலித்துறை)

"மாவாழ் புலிவாழ் சுரமுள வாக மணியிறுவாய்

ஓவா தளபெடுத்' தூஉவும் கெழூஉவும், உதாரணமாய் நாவாழ் பெரும்புகழ் நற்றத்தர் யாப்பில் நடந்ததுபோல்

I

251

யா.கா.25.

தேய்வாம் உகரம்வந் தாலியற் சீரிங்குச் செப்பியதே” – யா. கா. 25. மேற்.

இதன் கருத்தாவது, 'மாவாழ்சுரம்’, 'புலிவாழ்சுரம்' என்னும் இரண்டு வஞ்சியுரிச்சீரும் உளவாக வைத்து, ஒரு பயன் நோக்கித் ‘தூஉமணி” கெழூஉமணி' என்றளபெடையாக நேர் நடுவாகிய வஞ்சியுரிச்சீர் எடுத்துக் காட்டினார் நற்றத்தனாரும் வாய்ப்பியனாரும். அதுபோல, இந்நூலுடையாரும் வெண்பா இறுதிச்சீருக்கு வேறு உதாரண வாய்பாட்டால் ஓசையூட்டுதற் பொருட்டாக, குற்றியலுகரம் ஈறாகிய 'காசு, பிறப்பு' என்னும் வாய்ப்பாட்டான் நேரீற்று இயற்சீருக்கு வேறு உதாரணம் எடுத்தோதினார் என்றவாறு.

"அஃதே எனில், 'காசு, பிறப்பு' என்னும் இரண்டு சீருமே கொண்டு 'தேமா, புளிமா' என்னும் இரண்டு சீரும் களையாமோ?" எனின், அற்றன்று ; வெண்பா இறுதி ஓசை யூட்டல் வேண்டிக்காட்டின* காசு பிறப்புக்களே அமைய வைத்துப் பேர்த்தும் ‘தேமா புளிமா' என்னும் இரண்டு சீரும் காட்டியதாவது, காசும் பிறப்பும் குற்றியலுகர ஈறாய் ஓசை சுருங்கி ஈற்றின்கண் நிற்கும். அல்லாதவழி ஏந்திசைச் செப்ப லோசை பூண்டு நில்லாத 'தேமா, புளிமா' என்னும் இரண்டு நெட்டெழுத்திறுதி அவ்வேந்திசைச் செப்பலோசைத் தழுவி நிற்குமாகலின், அந்நுட்ப ஆராய்ச்சி வகையினால் அவையும் ஓதினாராதலின், 'கூறியது கூறல்' என்னும் குற்றமாகாது.

என்னை?

66

'கூறியது கூறினும் குற்றம் இல்லை

  • வேறும் ஒருபொருள் விளைக்கு மாயின்

என்ப ஆகலின். என்னை?

1. ஈண்டு அளபெடைகள் அலகு பெற்றில.

(பா. வே) *"குற்றியலுகரம் ஈறாகிய நேரீற்றியற் சீர்களைத் தேமா புளிமாவென்று ஓசை ஊட்டற்கு அஞ்சிக் காசு பிறப்பென்று இறுவதென்று முன்னோர் சொன்னவாறு. குற்றியலுகரம் ஓசை சுருங்கி ஈற்றின்கண் இனிது நிற்கும் என்பது முதற்குறிப்பு. *வேறொரு பொருளை.