உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

253

ன்னவை பிறவும் நாலடி நானூற்றில் வண்ணத்தால் வரு வனவும் எல்லாம் தூங்கிசைச் செப்பலோசை. பிறவும் அன்ன. (நேரிசை வெண்பா)

“திருநந்து பூம்பொய்கை தேர்ந்துண்ணும் நாராய்!

ஒருநன் றுரைத்தல் தவறோ? - கருநந்து

'முத்துப்பந் தீனும் முழங்கருவி நாடற்கென்

2பத்தினிமை அல்குற் பசப்பு"

“கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை

சொல்லா நலத்தது சால்பு”

திருக்குறள் 984

ன்னவை பிறவும் முத்தொள்ளாயிரத்து வண்ணத்தால் வருவன எல்லாம் ஒழுகிசைச் செப்பலோசை.

இவை அம்மூன்றிசைச் செப்பலோசைக்கும் அவிநயனார் காட்டிய பாட்டு.

இவை ஈற்றடி முச்சீர் ஆயினவாறும். இறுதி அசைச்சீர் ஆயினவாறும், குற்றியலுகரம் வந்து 'காசு, பிறப்பு' என்னும் சீரால் இற்றவாறும் கண்டு கொள்க.

இனி, ஒருசார் ஆசிரியர்,

வண்சீரே வந்து

வண் ளை தட்ப ஏந்திசைச் சப்பல் பிறக்கும்;

இயற்சீரே வந்து வெண்டளை தட்ப ஒழுகிசைச் செப்பல் பிறக்கும்; வெண்சீரும் இயற்சீரும் வந்து வெண்டளை தட்பத் தூங்கிசைச் செப்பல் பிறக்கும்,' என்ப. அவை வந்தவழி உச்சரித்துக் கண்டுகொள்க.

இனி, மற்றொருசார் ஆசிரியர், 'செப்பல், வெண்கூ, அகவல் என்னும் மூவகை ஓசை உடைத்து வெண்பா,' என்ப. என்னை? “பண்பாய்ந் தடக்கிய பாநடை தெரியின், வெண்பா மூவிசை விரிக்குங் காலே'

எனவும்,

3

99

"செப்பல் வெண்பா, வெண்கூ வெண்பா,

அகவல் வெண்பா என்றனர் அவையே

எனவும் சொன்னாராகலின்.

அவற்றுள், 'செப்பல் வெண்பா' என்பது, எழுசீரால் நடப்பது என்னை,

1. திரண்ட முத்து. பந்து - திரட்சி. 2. மாறா அன்பு. 3. மூவகை ஒலி.