உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

(குறள் வெண்பா)

“சொல்லு சொல்லப் *பொறுப்பவே ; யாதொன்றும் சொல்லாத சொல்லப் *பொறா

257

எனவும் தனிக்குறில் நேரசையும் நெடிலுடை நிரையசையும் இறுதிக்கண் அருகி வந்தனவாயினும், சிறப்பின்மை உச்சரித்துக் கண்டு கொள்க.

(நேரிசை வெண்பா)

“குற்றுகரச் சீரோ டுகர வகாரச்சீர்

66

இற்ற எழுவாயாப் பின்னிசைத்தாய் - முற்றுகரம்

  • ஈறாய் வருமே எனினும் நிரையவாய்க்

கூறார் சிறப்புடைத்தாக் கொண்டு'

இதுவும் ஒருசார் ஆசிரியர் மதம்.

அவர் காட்டும் உதாரணம் :

(குறள் வெண்பா)

“அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற் கியல்பு

6 எனவும்,

99

“ஊருணி நீர்நிறைந் தற்றே 'உலகவாம்

பேரறி வாளன் திரு"

திருக்குறள் 382.

– திருக்குறள் 215.

(ச)

எனவும் முற்றுகர ஈற்றடிக்குச் சீர் இவை.குற்றுகர முற்றுரங்கட்கு மேற் காட்டினவும் கொள்க.

வெண்பாவின் வகை

ருஅ. குறள்சிந் தின்னிசை நேரிசை பஃறொடை

எனவைந் தாகும் வெண்பாத் தானே.

இச்சூத்திரம், செப்பலோசைத்தாய், ஈற்றடி முச்சீராய், ஏனையடி நாற்சீராய், வெண்சீரும் இயற்சீரும் வந்து, வெண்டளை தட்டு, வேற்றுத்தளை விரவாது, ஈற்றடியின் இறுதிச்சீர் ‘காசு, பிறப்பு, தோள், வளை' என்னும் வாய்பாட்டான் இறும் என்றும், குற்றியலிகரமும், குற்றியலுகரமும், ஒற்றும் ஆய்தமும் அல்லாத எழுத்து ஏழு முதலாகப் பதினாறு எழுத்தின்காறும் உயர்ந்த பத்து 2நிலமும் பெற்ற நாற்சீர் அடித்தாய், ஐந்தெழுத்து முதலாகப் பத்தெழுத்தின்காறும் உயர்ந்த ஆறு நிலமும் பெற்ற முச்சீர் உலகோரால் விரும்பப்பெறும். 2. இடம்.

1.

(பா. வே) *பெறுபவே. *பெறா. *“ஈறாய் அருகி வருமென்றே பொய்கையார் கூறார் அஃதீறாக் கொண்டு”