உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

அடியான் முடியும் முடியும் என்றும் வேண்டப்பட்ட வினது விகற்பம் உணர்த்துதல் நுதலிற்று.

1வெண்பா

(இ.ள்) 'குறள் வெண்பாவும், சிந்தியல் வெண்பாவும், இன்னிசை வெண்பாவும், நேரிசை வெண்பாவும், பஃறொடை வெண்பாவும் என ஐந்து வகைப்படும் வெண்பா,' என்பர் ஆசிரியர் என்றவாறு. 'குறள், சிந்து, நேரிசை, இன்னிசை, பஃறொடை என்று முறையிற் கூறாது, 'குறள், சிந்து, இன்னிசை, நேரிசை, பஃறொடை' என்று முறை பிறழச் சொல்லவேண்டியது என்னை? எனின், அஃது ஒரு பயன் நோக்கிச் சொல்லப்பட்டது. 'தலைதடு மாற்றம் தந்து புனைந் துரைத்தல்' என்பது தந்திர உத்தி ஆகலின். ‘யாது அப்பயன்? எனில், வெண்பாவினை ஓரடி முக்கால் என்றும், சிந்தியல் வெண்பாவினை ஈரடி முக்கால் என்றும், நேரிசை வெண்பாவினை நேரடி மூவடி முக்கால் என்றும், இன்னிசை வெண்பாவினை இன்னிசை மூவடி முக்கால் என்றும், பஃறொடை வெண்பாவினைப் பலவடி முக்கால் என்றும் வழங்குவர் ஒருசார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு

வேண்டப்பட்டது.

66

"குறள்சிந் தின்னிசை நேரிசை பஃறொடை எனவைந் தென்ப வெண்பா'

وو

என்னாது, ஆகும்' என மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை?' எனின், செப்பலோசையிற் சிறிது சிறிது சிதைந்த பஃறொடை வெண்பாவினைக் கலி வெண்பாவாகவும், அல்லாத வெண்பாக்களது சிதைவினை ஒருபுடை ஒப்புமை நோக்கித் தத்தம் இனமாகவும் கொண்டு வழங்கப்படும் என்பது அறிவித்தற்கு வேண்டப் பட்டது.

இவற்றை இடுகுறியானும் காரணக்குறியானும் வழங்குப. காரணக்குறியான் வழங்குமாறு: குறளும் சிந்தும் என இவற்றை மேல் அடிக்குச் சொன்னாற்போல் (யா.வி. 24) உரைத்துக் கொள்க.

"நேர்' என்பது, மாறாதற்கண்ணும், ஒத்தற்கண்ணும், தனிமைக்கண்ணும், மிகுதிக்கண்ணும், நுட்பத்தின் கண்ணும், சமனாதற்கண்ணும், உடம்படுதற்கண்ணும், பாதிக்கண்ணும், தலைப்பாட்டின் கண்ணும், நிலைப்பாட்டின் கண்ணும், கொடைக்கண்ணும் நிகழும். என்னை?

266

“நேர்ந்தார், அரண்பல கடந்த அடுபோர்ச் செழிய!”

எனவும்,

1.

நாற்சீரடிக்குக் குற்றியலுகரம் முதலிய நீங்கிய எழுத்து ஏழு முதல் பதினாறு என்றும், முச்சீரடிக்கு ஐந்து முதல் பத்தென்றும் அறிக. ஒவ்வோர் எழுத்து மிகையும் ஒரு நிலம் எனக் கணக்கிடப்பெறும் என்க. 2. எதிரிட்டார்.