உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

261

வெண்பா எனப்படும் ; (‘ஈரடி குறள்’ என்னும் சொற்பொருள், இருசீர் குறளடி; சிந்தடி முச்சீர்' (யா. வி. 24. மேற்) (என்றாற் போலக் கொள்க). சிந்து இரு தொடை இயற்றே மூன்றடியால் வருவது சிந்தியல் வெண்பா எனப்படும் என்றவாறு.

-

இரு தொடை எனவே, "மூன்றடி' என்பது பெறப் பட்டது; அடியிரண்டு இயைந் தவழித் தொடை' என்பது ஆகலின்.

ரு

'ஈரடி குறள்; சிந்து இரு தொடைத்தே,' என்னாது, 'இயற்றே, என்று விகற்பித்துச் சொல்ல வேண்டியது என்னை? மோனை, எதுகை, முரண், யைபு, அளபெடை என்னும் ஐந்து தொடையானும் வருவனவற்றை ‘இனக்குறள் வெண்பா' என்றும், செந்தொடையானும் ஒழிந்த தொடை விகற்பத்தானும் வருவனவற்றை ‘விகற்பக் குறள் வெண்பா' என்றும், மூன்றடியால் நேரிசை வெண்பாவே போல வருவன வற்றை ‘நேரிசைச் சிந்தியல் வெண்பா' என்றும் இன்னிசை வெண்பாவே போல மூன்றடியால் வருவனவற்றை ‘இன்னிசைச் சிந்தியல் வெண்பா' என்றும் வழங்குவர் ஒருசார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது.

அவற்றிற்குச் செய்யுள் வருமாறு :

(இனக்குறள் வெண்பா)

“சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு

எனவும்,

66

“தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க் கின்னா செயல் !

6 எனவும்,

6

66

"இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண்'

எனவும்,

6

766

சுடிகை நுதல்மடவாள் சொல்லும் கரும்பு கதிர்வளைத் தோளுங் கரும்பு

எனவும்,

1. தலைச்சுட்டி.

(மோனை)

- திருக்குறள்267.

(எதுகை) திருக்குறள் 318.

(முரண்)

-

திருக்குறள் 615

(இயைபு)