உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

இவற்றுக்கு இலக்கணம் பிறரும் இவ்வாறே சொன்னார்.

என்னை?

66

"தொடையொன் றடியிரண் டாகி வருமேற் குறளின் பெயர்க்கொடை கொள்ளப் படுமே’

என்றார் காக்கைபாடினியார்.

‘ஈரடி இயைந்தது குறள்வெண் பாவே" என்றார் அவிநயனார்.

"ஐம்பெருந் தொடையின் இனக்குறள் விகற்பம் செந்தொடை *விகற்பொடு செயிர்தீர் ஈரடி

எனவும்,

“நேரிசைச் சிந்தும் இன்னிசைச் சிந்துமென் றீரடி முக்கால் இருவகைப் படுமே

எனவும் சொன்னார் பிறரும் எனக் கொள்க.

(கட்டளைக் கலித்துறை)

- யா. கா. 25. மேற்.

“நேரிசை இன்னிசை போல நடந்தடி மூன்றின்வந்தால் நேரிசை இன்னிசைச் சிந்திய லாகும் ; நிகரில்வெள்ளைக் கோரசைச் சீரும் ஒளிசேர் பிறப்பும்ஒண் காசுமிற்ற சீருடைச் சிந்தடி யேமுடி வாமென்று தேறுகவே

யா. கா. 26.

இவ்வியாப்பருங்கலப் புறநடையை விரித்து உரைத்துக்

கொள்க.

நேரிசை வெண்பா

JTО. நாலோ ரடியாய்த் தனியிரண் டாவதன் ஈறொரூஉ வாய்முற் றிருவிகற் பொன்றினும் நேரிசை வெண்பா எனப்பெயர் ஆகும்.

இச்சூத்திரம் நேரிசை வெண்பா ஆமாறு உணர்த்துதல்

நுதலிற்று.

இ.ள்) நாலோர் அடியாய் நான்கு அடியாய், தனி இரண்டாவதன் ஈறு - தனிச்சொல் இரண்டாம் அடியின் இறுதியாய், ஒரூஉ 'வாய்முற்று - அவ்விரண்டாமடி ஒரூஉத் தொடையாயும் கதுவாய்த் தொடையாயும் முற்றுத் தொடை யாயும், (‘ஆய்’ என்னும் சொல் 2ஆதிதீபகம் ஆதலின், இரு வழியும் கூட்டி உரைக்கப்பட்டது) து) இரு விகற்பு ஒன்றினும்

ம்

3

1. கதுவாய். 2. முதல் நிலைத் தீவகம் (முதல் நிலை விளக்கு) என்னும் அணி. ஓரிடத்து நின்றசொல் வேறிடங்களிலும் சென்று இயைந்து பொருள் பயப்பது விளக்கணியாம். 3. இடையும், இறுதியும். 'மூவழியும்' என்பது மு.ப.

(பா. வே) *விகற்பத் தொடையொடு சிவணும்.