உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

-

265

நேரிசை வெண்பா எனப் பெயர் ஆகும் இரண்டு விகற்பத் தானும் ஒரு விகற்பத்தானும் வருவது நேரிசை வெண்பாவாம் என்றவாறு.

‘வாய்' என்பது, பல பொருட்டு ஆயினும், ஒரூஉவினோடும் முற்றினோடும் வந்தமையால், கதுவாயைத் தலைக்குறைத்து 'வாய்' என்று சொல்லப்பட்டது எனக் கொள்க. என்னை?

66

"வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும் தேறத்தோன்றும் பொருள்தெரி நிலையே”

- யா. வி. 35. மேற்.

என்பது இலக்கணம் ஆகலின். அல்லதூஉம், பிறரும் கண்ணாடி' என்பதனைத் தலைக்குறைத்து, ஆடி நிழலின் அறியத் தோன்றி’ (தொல். பொ. 481) என்றார் எனக் கொள்க.

இரண்டாமடி ஒரூஉத் தொடையாய் வருவது சிறப் புடைத்து ஆகலின், முன் வைக்கப்பட்டது; 'சிறப்புடைப் பொருளை முந்துறக் கிளத்தல்,' என்பது தந்திர உத்தி ஆகலின். முற்றுத்தொடை, அருகியன்றி வாராமையின், கடைக்கண்

வைக்கப்பட்டது.

கதுவாய்த்தொடை,

இடைக்கண் வைக்கப்பட்டது.

ை டயாய

அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:

இயல்பிற்றாகலின்,

(இருவிகற்ப நேரிசை வெண்பா)

66

'சிலைவிலங்கு நீள்புருவம் சென்றொசிய நோக்கி

முலை விலங்கிற் றென்று முனிவாள் - மலை விலங்கு

தார்மாலை மார்ப ! தனிமை பொறுக்குமோ

கார்மாலை கண்கூடும் போழ்து?'

எனவும்,

“வண்மை மதம்பொழிந்து மாற்றார் திறல்வாடத்

தண்டியலங்காரம் 16.மேற்.

-யா. வி. 4. 18. 37. மேற்.

திண்மை பொழிந்து *திகழும்போன்ம் - ஒண்மைசால் நற்சிறைவண் டார்க்கும் நளிநீர் வயற்பம்பைக்

கற்சிறை என்னும் களிறு”

6 எனவும் இவை இரண்டாமடி 'ஒரூஉத் தொடையாய், இரண்டு விகற்பத்தால் வந்த நேரிசை வெண்பா.

1. ஈண்டு ‘ஒரூஉத்தொடை' என்றது ஒரூஉ எதுகைத்தொடையை.

(பா. வே) *திகழும்போல்.