உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

யாப்பருங்கலம்

இன்னொலிநீர்ச் சேர்ப்பன் இரவில் வருவதன்முன் கொன்னே குறிசெய்த வாறு?

267

எனவும் இவை இரண்டாமடியின் இறுதி தனிச்சொல்லான் அடிமூய், முற்றுத் தொடையாய், இரு விகற்பத்தானும் ஒரு விகற்பத்தானும் வந்த நேரிசை வெண்பா.

166

(ஒரு விகற்ப நேரிசை வெண்பா)

வஞ்சியேன் என்றவன்றன் ஊருரைத்தான் ; யானுமவன் வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன் - வஞ்சியான் வஞ்சியேன் வஞ்சியேன்' என்றுரைத்தும் வஞ்சித்தான் 2வஞ்சியாய் ! 3வஞ்சியார் கோ

யா. கா. 23. மேற்.

இது மோனைத் தொடையாய், இரண்டாமடியின் இறுதி, தனிச் சொல்லான் அடிமூய், ஒரூஉத்தொடையாயும், ஒரு விகற்பத்தானும் வந்த நேரிசை வெண்பா.

(இரு விகற்ப நேரிசை வெண்பா)

4“கானலம் பட்ட கலிமாத்தன் கைக்கொண்டு 5கானலம் பட்டினத்துக் கண்ணுற்றான் - கானலம் °போதிற மோதிப் புரிவான்று மால்கடல்வாய்ப் 7போதிற மோதிப் புரிந்து

99

து மோனையாய், இரண்டு விகற்பத்தான் வந்தது. கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனை

இடையாயார் தெங்கின் அனையர் ;

-

தலையாயார்

எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே தொன்மை உடையார் தொடர்பு

து முரணாய், இரு விகற்பத்தான் வந்தது.

966

தா அய்த்தா அய்ச் செல்லும் தளர்நடைப் புன்சிறார்

- நாலடியார் 216.

போஒய்ப்போஒய்ப் பூசல் இடச்செய்து - போஒய்ப்போஒய் நிற்குமோ நீடு நெடும்°புதவம் தானணைந்து

பொற்குமோ “என்னாது போந்து”

ஃது அளபெடையாய், இரு விகற்பத்தான் வந்தது.

நேரிசை வெண்பாவினுள் முதலிரண்டடியும் மோனையும் எதுகையும் ஒருசார் முரணும் அளபெடையும் என்னும்

1. வஞ்சிநகரேன்; வஞ்சிக்கமாட்டேன். 2. வஞ்சிக் கொடிபோல் வாய். 3. சேரன். 4.கால்நலம்பட்ட கலிமா. 5. கடற்கரை. 6. பூ. 7. பொழுது. 8. பனை. 9. தாவித்தாவி. 10. கதவம்.

(பா. வே) *என்னாத போது.