உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

இந்நான்கு தொடையானும் அல்லது, செந்தொடையானும் இயைபுத்தொடையானும் வாரா. என்னை?

இரண்டாம் அடியின் ஈறொரூஉ எய்தி முரண்ட *எதுகை ஆகியும், ஆகா

திரண்டு துணியாய் இடைநனி போழ்ந்தும் நிரந்தடி நான்கின நேரிசை வெண்பா'

என்றார் காக்கைபாடினியார்.

யா. கா. 23. மேற்.

‘அஃதே எனின், முற்றும் கதுவாயும் சொல்லிற்றிலர் பிற’, எனின், அற்றன்று; சிறப்புடைமை நோக்கி ஒரூஉத்தொடையை எடுத்து ஓதினார்; அல்லனவும் விதப்பானும், பிறவாற்றானும் உடன்பட்டார் எனக் கொள்க. என்னை?

"குறட்பா இரண்டவை நால்வகைத் தொடையாய், முதற்பாத் தனிச்சொலின் அடிமூய், இருவகை விகற்பின் நடத்தல் நேரிசை வெண்பா"

என்றார் அவிநயனார்.

- யா. கா. 23. மேற்.

இதன் கருத்தியாதோ?' எனின், 'இரண்டு குறட்பாவாய், நடுவுத் தொடைக்கேற்ற தனிசொல்லால் அடிமூவாய், முதற்குறட் பாவின் முதற்றொடை, எதுகை. பகைத்தொடை, அளபெடை என்னும் நான்கு தொடையாய், ஒத்த விகற்பத்தானும் ஒவ்வா விகற்பத்தானும் வருவது நேரிசை வெண்பா', என்று மொழி மாற்றுப் பொருள்கோள் வகையால் கூறினார் என்று உணர்க. 'நாலோர் அடியாய்த் தனியிரண் டாவதன்

66

ஈறொரூஉ வாய்முற் றிருவிகற் பொன்றினும் நேரிசை வெண்பா ஆகும்”

என்றாலும், கருதிய பொருளைப் பயக்கும்;

"நேரிசை வெண்பா எனப்பெயர் ஆகும்”

என்று விகற்பித்துச் சொல்ல வேண்டியது என்னை?

இரண்டு குறள் வெண்பாவாய், நடுவுத் தொடைக்கேற்ற தனிச்சொற் பெற்று, ஒரு விகற்பத்தானும் இரு விகற்பத்தானும் வருவனவும், ஒற்றுமைப் படாத உலோகங்கள் ஒற்றுமைப்படப் பற்றாசிட்டு விளக்கினாற்போல முதற் குறட்பாவினோடு தனிச் சொலிடை வேறுபட்டால் ஒன்றும் இரண்டும் அசை கூட்டி உச்சரிக்கப்பட்டு, ஒரு விகற்பத்தானும் இரு விகற்பத்தானும்

(பா. வே) *எதுகையதாகியும் *நான்கி னேரிசை.