உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

269

வருவன என்று அறியுமாற்றால் ஆறு விகற்பம் படுத்துச் சொல்லு வர் ஒருசார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு என்க. என்னை?

"இருகுறள் நடுவண் தனிச்சொற் பெற்றும், இரண்டொன் றாசும் அவணிடை யிட்டும், ஒருவிகற் பாகியும் இருவிகற் பாகியும் நிகழ்வன நேரிசை வெண்பா ஆகும்’ என்றாராகலின்.

அவர் காட்டும் பாட்டு:

(இரு விகற்ப நேரிசை வெண்பா)

“படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு ; - 1(நடைமுறையின்)

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு

- திருக்குறள் 381, 382.

6

எனவும்,

66

'தடமண்டு தாமரையின் தாதா டலவன்

இடமண்டிச் செல்வதனைக் கண்டு - பெடைஞெண்டு

பூழிக் கதவடைக்கும் புத்தூரே பொய்கடிந்

தூழி நடாயினான் ஊர்

ரு

யா. கா. 23. மேற்.

எனவும் இவை இரு குறள் நடுவண் தனிச்சொற்பெற்ற மாத்திரையானே வந்த இரு விகற்ப நேரிசை வெண்பா.

(ஒரு விகற்ப நேரிசை வெண்பா)

"மறந்தும் பிறன்கேடு சூழற்க ; சூழின்,

அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு ; *(சிறந்தீர்)

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை எண்ணிக்கொண் டற்று"

திருக்குறள் 204. 22.

எனவும்,

66

அரிய 'வரைகீண்டு காட்டுவார் யாரே பெரிய 'வரைவயிரம் கொண்டு? - தெரியின், கரிய ‘வரைநிலையார் காய்ந்தாலென் செய்வார் பெரிய வரைவயிரம் கொண்டு?”

- நீதிவெண்பா.

யா. கா. 23. மேற்.

1. இங்கு அமைத்தற்குரிய தனிச்சொல் ஏடுகளிற் காணப்படவில்லை எனக்குறித்து இத் தனிச்சொல் இரண்டாம் பதிப்பில் அமைத்துக் கொள்ளப் பெற்றுள்ளது. 2. ஆண் நண்டு. 3. மலையைத்தோண்டி. 4. வயிரம் கொண்ட மூங்கில். 5. மலைபோன்ற பெரியர். 6. மிகப் பெருத்த சினங்கொண்டு.

(பா. வே) *பிறந்து.