உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

எனவும் இவை இரு குறள் தனிச்சொற் பெற்று ஒரு விகற்பத்தால் வந்த நேரிசை வெண்பா.

(இரு விகற்ப நேரிசை வெண்பா)

“எய்தற் கரிய *இயன்றக்கால் அந்நிலைய

செய்தற் கரிய செயல் என்று- வய்யகத்

தீதல் இசைபட வாழ்தல் ; அதுவல்ல தூதியம் இல்லை உயிர்க்கு

- திருக்குறள் 480, 231.

இது முதற் குறட்பாவினோடு தனிச்சொலிடை இரண்டசை யால் ஆசிட்டு இரு விகற்பத்தால் வந்த நேரிசை வெண்பா.

'வஞ்சியேன் என்றவன்றன்' (பக். 267) என்பது, இரண்டசையால் சிட்டு, ஒரு விகற்பத்தால் வந்த நேரிசை வெண்பா.

'சிலை விலங்கு நீள் புருவம்’ (பக். 265) என்பது, இரண்டு விகற்பத்தால், ஓரசையால் ஆசிட்ட நேரிசை வெண்பா.

66

ஆர்த்த அறிவினர் ஆண்டளைஞ ராயினும்' (பக். 266) என்பது ஓரசையால் ஆசிட்டு ஒரு விகற்பத்தால் வந்த நேரிசை வெண்பா.

ஈண்டுத் தொல்லாசிரியர் வைத்த முறையானே சொல்லப்

பட்டது.

சுக.

இன்னிசை வெண்பா

விகற்பொன் றாகியும் மிக்கும் தனிச்சொல் இயற்றப் படாதன இன்னிசை வெண்பா.

(எ)

ஃது இன்னிசை வெண்பா ஆமாறு மாறு உணர்த்துதல்

நுதலிற்று.

இ.ள்) ஒரு விகற்பத்தானும் பல விகற்பத்தானும் தனிச் சொல் இன்றி நான்கடியான் வருவன இன்னிசை வெண்பா எனப்படும் என்றவாறு.

'நான்கடி' என்பது, அதிகாரவசத்தால் உரைக்கப்பட்டது. பிறரும் இவ்வாறே சொன்னார் என்க. என்னை?

“தனிச்சொல் தழுவல வாகி, விகற்பம்

பலபல தோன்றினும் ஒன்றே வரினும்

  • இயற்பெயர் இன்னிசை என்றிசி னோரே”

என்றார் காக்கைபாடினியார்.

(பா. வே) *இயைந்தக்கால். *அதற்பெயர்.