உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

13

உம்மையான் ஒழிந்த மோனை எதுகை இயைபு அளபெடை என்னும் நான்கு தொடைக்கும் இவ்வாறே ஒட்டிக் கொள்க. அவையெல்லாம் யாப்பருங்கல விருத்தியுட் கண்டு கொள்க (40) என்றும், “இவ்வண்ண விகற்பம் எல்லாம் தொல்காப்பியத் துள்ளும் யாப்பருங்கல விருத்தியுள்ளும் கண்டு கொள்க” (43) என்றும், வருவனவற்றால் விருத்தியின் முன்மை தெற்றெனப் புலனாம். இக்குறிப்புக்கள் உரைமுன்மையைக் காட்டுவது மட்டுமன்றிப் பிறிதொரு வகையாலும் ஆய்வுக்குத் துணை நிற்பதால் விரியக் காட்டினாம்.

"யாப்பருங்கலக் காரிகையின் உரையாசிரியர் குணசாகரர் என்பது பரம்பரையாக வரும் கேள்வியானும், காரிகைச்சுவடிகளின் மேல் வரையப் பெற்றிருக்கும் குறிப்பினாலும் தெரிகிறது. யாப்பருங்கலத்துக்கு உரைகண்டாரும் இவரே. இரண்டு நூல்களின் உரைகளிலும் உரையாசிரியர் எடுத்தாளும் இலக்கண மேற் கோட்சூத்திரங்களும் உதாரண இலக்கியங்களும் ஒற்றுமை யுடையனவாக இருத்தலினாலும் உரைநடையும் பலவிடங்களில் ஒன்றாகக் காணப்படுவதனாலும் இது விளங்குகின்றது என்பர். இக்கருத்தை ஏற்றுக் கொள்வதற்குத் தக்க சான்றுகள் காட்டப் பெறுதல் வேண்டும். ஆனால் இரண்டு உரைகளையும் கண்ட வர்கள் வேறுவேறானவர் என்பதற்குச் சான்றுகள் உள. அவற்றைக் காண்போம்.

991

இலக்கண நூல்களில் வரும் எடுத்துக் காட்டுக்களும், மேற்கோள்களும் ஒன்றைத் தழுவி ஒன்று வருவது என்பது மரபு. தெரிந்த எடுத்துக்காட்டும் மேற்கோள்களும் பயில வழங்கு மாயின் கற்பார்க்கு இலக்கணம் இடர்ப்பாடு இன்றிப் பதியும் என்பது உரையாசிரியர்கள் உட்கிடை. நன்னூலுக்குரிய பல உரைகளையும் ஒப்பிட்டுக் காண்பார் இவ்வுண்மையை உணர்வர். உரை, மேற்கோள் இவற்றின் ஒப்புமை கருதி நன்னூல் உரைகளை ஒருவரே செய்தார் என்பது இல்லையன்றே! இறந்தது விலக்கல், எதிரது போற்றல், ஒருதலை துணிதல், இன்னதல்ல திதுவென மொழிதல், எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல், தன்குறிவழக்கம் மிகவெடுத்துரைத்தல், 3விதப்புக் கிளவியால் வேண்டுவதுரைத்தல் முதலிய இடங்களில் மட்டுமே உரையாசிரியர்கள் புதிய மேற்கோள்களைக் காட்டிச் செல்வர். எஞ்சிய இட ங்களில் ஒருநூற்குக் கண்ட உரைகளிலும்,

1. யாப்பருங்கலக் காரிகை. உ, வே. சா. நூல்நிலைய வெளியீடு; உரையாசிரியர் வரலாறு, 2. உத்திவகைகள் (நன். 14)

3. “விதப்புக்கிளவி வேண்டியது விளைக்கும்' என்பது நூற்பா