உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

6TO.

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

ஆசிரியப்பாவின் பெயர் வேறுபாடு நேரிசை இணைக்குறள் மண்டிலம் நிலைப்பெயர் ஆகுமண் டிலமென் றகவல் நான்கே.

இஃது என் நுதலிற்றோ?' எனின் அகவல் ஓசையோடு அளவடித்தாகியும், இயற்சீர் பயின்றும் அயற்சீர் விரவியும், தன் தளை தழுவியும் பிற தளை மயங்கியும், நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர் வாராது அயற்பா அடி மயங்கியும் மயங் காதும், ஐஞ்சீர் அடியால் அருகி வரும் என்றும், நாலெழுத்து முதலாக இருபதெழுத்தின் காறும் உயர்ந்த பதினேழ் நிலமும் பெற்ற நாற்சீரடியால் நடைபெறும் என்றும் வேண்டப்பட்ட ஆசிரியப்பாவினது பெயர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

இ.ள்) நேரிசை ஆசிரியமும், இணைக்குறள் ஆசிரியமும், நிலைமண்டில ஆசிரியமும், அடிமறி மண்டில ஆசிரியமும் என ஆசிரியப்பா நான்காகும் என்றவாறு.

இது மொழி மாற்றுச் சூத்திரம் 'எவ்வாறோ?' எனின், 'நிலைப் பெயர் ஆகும் மண்டிலம்' என்றவழி, 'நிலை' என்ப தனையும் ‘மண்டிலம்’ என்பதனையும் கூட்டி ‘நிலை மண்டிலம்' என்றும் ; பின்னை ‘அகவல்' என்பதனையும் 'பெயர்' என்ப தனையும் 'நான்கு' என்பதனையும் 'ஆகும்' என்பதனையும் கூட்டி, ‘அகவற் பெயர் நான்காகும்,’ என்றும் கொள்க.

மிக்க புகழும் சொல்லும் ஓசையும் உடைத்தாகலினால், ‘நேரிசை' என்பதூஉம் காரணக்குறி.

இணைந்து குறைந்த அடியுடைத்தாகலின், குறள்' என்பதூஉம் காரணக்குறி.

ணைக்

எல்லா அடியும் முதல் நடு இறுதியாக உச்சரித்தாலும் ஓசையும் பொருளும் ஒத்து வருதலின், ‘அடி மறி மண்டிலம்’ என்பதூஉம் காரணக்குறி.

ஒரு பெற்றியே நின்று எல்லா அடியும் ஒத்து நடத்தலின், 'நிலை மண்டிலம்' என்பதூஉம் காரணக்குறி.

என்னை?

“நேரிசை இணைநிலை மண்டிலம் மண்டிலம்

ஈரிரண் டியல எண்ணுங் காலை

என்றார் பிறரும்.

'மூன்று அகவல் ஓசையானும் நான்கு ஆசிரியப்பாவையும் உறழப் பன்னிரண்டாம். நான்கு ஆசிரியப்பாவினையும்

1. ஏந்திசை, தூங்கிசை, ஒழுகிசை.