உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

295

'சிறப்புடை ஏழ்தளை, சிறப்பில் ஏழ்தளை' எனக் கூறுபடுப்ப, ஐம்பத்தாறாம். அவை ஓசையும் தளையும் கூட்டி உறழ. நூற்று அறுபத்தெட்டாம்.

'பெயர்' என்ற விதப்பு என்னை? எனின், ஒருசார் ஆசிரியர் வேற்றடி விரவி வந்த ஆசிரியங்களை ‘விரவியல் ஆசிரியம்’ என்றும் விரவா தனவற்றை ‘இன்னியல் ஆசிரியம்' என்றும் சொல்லுவர் என்பது அறிவித்தற்கு எனக் கொள்க.

நான்கு ஆசிரியத்தினையும் இவ்விரு பெயராற் கூறுபடுப்ப, எட்டாம், அவை ஓசையும், தளையும் கூட்டி உறழ, முந்நூற்று முப்பத்தாறாம். பிறவாற்றான் விகற்பிக்கப் பலவாம்.

நேரிசை ஆசிரியப்பா

எக. அந்த அடியின் அயலடி சிந்தடி

வந்தன நேரிசை ஆசிரி யம்மே.

(கஎ)

ஃது, என் நுதலிற்றோ?' எனின், மேல் அதிகாரம் பாரித்த நான்கனுள் நேரிசை ஆசிரியப்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ள்) அந்த அடியின் அயல் அடி ஈற்றடியின் மேலையடி, சிந்தடி வந்தன- முச்சீரடியான் வந்தன, நேரிசை ஆசிரியம்மே நேரிசை ஆசிரியப்பா எனப்படும் என்றவாறு.

வரலாறு:

-

“நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரள வின்றே சாரற்

'கருங்கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே”

குறுந்தொகை 3.

இஃதீற்றயலடி முச்சீரான் வந்தமையின் நேரிசை ஆசிரியப்பா.

66

(நேரிசை ஆசிரியப்பா)

2

'சிறுவெள் ளரவின் அவ்வரிக் குருளை

கான யானை அணங்கி யாஅங்கு

இளையள் முளைவாள் எயிற்றள்

வளையுடைக் கையளெம் அணங்கி யோளே'

-

குறுந். 119.

இது தூங்கிசை அகவற் சிறப்புடை இயற்சீரான் வந்த நேரிசை ஆசிரியப்பா. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.

சிந்து வந்தன' என்னாது, பெயர்த்தும் ‘அடி’ என்றது

என்னை?

1. கரிய அடி. 2. அழகிய வரிகளையுடைய குட்டி.