உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

“கைக்கிளைப் பொருள்மேல் ஆசிரியம் வருவுழி எருத்தடி முச்சீரான் வரப்பெறாது' என்பர் கடியநன்னியார் என்பது அறிவித்தற்கு எனக் கொள்க. என்னை?

கைக்கிளை ஆசிரியம் வருவ தாயின், முச்சீர் எருத்தின் றாகி, முடிவடி எச்சீ ரானும் ஏகாரத் திறுமே

என்றாராகலின்.

99

“இற்றதன் மேலடி ஒருசீர் குறைய நிற்பது நேரிசை ஆசிரி யம்மே

என்றார் அவிநயனார்.

"இறுசீர் அடிமேல் ஒருசீர் குறையடி

பெறுவன நேரிசை ஆசிரி யம்மே

என்றார் சிறுகாக்கைபாடினியார்.

இணைக்குறள் ஆசிரியப்பா

எஉ. இணைக்குறள் இடைபல குறைந்திறல் இயல்பே.

ஃது என் நுதலிற்றோ?' எனின்,

ஆசிரியப்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(கடியநன்னியார்)

(கஅ)

ணைக்குறள்

இ.ள்) இணைக்குறள் - இணைக்குறள் ஆசிரியப்பா, இடை பல குறைந்து இறல் இயல்பே - ஈற்றடியின் மேலையடி இரண்டு சீரும் ஒரு சீரும் குறைந்து இறுதல் இயல்பு எனப்படும். என்றவாறு. ‘ஈற்றடியின் மேலையடி' என்பது, 'அதிகாரம் வருவித்து

உரைத்தது.

'இயல்பே' என்ற விதப்பால், முதலடியும் ஈற்றடியும் ஒழித்து ஏனையடி ஒரோவொன்று ஒரு சீரும் இரு சீரும் குறைந்து வரும் என்க.

(இணைக்குறள் ஆசிரியப்பா)

2“நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்

சாரச் சார்ந்து

தீரத் தீரும்

சாரல் நாடன் கேண்மை,

சாரச் சாரச் சார்ந்து,

தீரத் தீரத் தீர்பொல் லாதே”

தொல். செய். 66. இளம். பேரா. மேற்.

யா. கா. 28. மேற்.

1. அந்த அடியின் அயலடி சிந்தடி என்பது 71 ஆம் நூற்பா ஆகலின் அதிகாரம் ஆயிற்று. 2. இப்பாவில் ஒருசீர் குறைந்தமைக்கு ஈற்றயலடி யிரண்டும், இருசீர் குறைந்தமைக்கு ஏனைக் குறளடி இரண்டும் எடுத்துக்காட்டாகக் கொள்ளத் தகும்.