உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

இது தன் சீர் நேர்த்தளையான் வந்த மண்டில ஆசிரியப்பா. “பூங்கட் குறுந்தொடி யாங்குற் றனளோ?

புனல்சேர் ஊரன் பொதுமகன் அன்றோ?

ஏதில் மாக்கட் கெவனா கியரோ?

போதி பாண ! நின் பொய்ம்மொழி எவனோ?”

299

இது சிறப்புடை இயற்சீர் வெண்டளையான் வந்த மண்டில ஆசிரியப்பா.

766

சூரல் பம்பிய சிறுகான் யாறே;

2

சூரர மகளிர் ஆரணங் கினரே;

வாரலை எனினே யானஞ் சுவலே;

சாரல் நாட ! நீவர லாறே’

தொல். செய். 113. இளம். மேற்.

யா. கா. 28. மேற்.

து சிறப்புடை ஆசிரிய நேர்த்தளையான் வந்த மண்டில ஆசிரியப்பா.

இவற்றை மனப்பட்டது ஓர் அடி முதலாக உச்சரித்து, ஓசையும் பொருளும் பிழையாதவாறு கண்டுகொள்க.

என்னை?

“உரைப்போர் குறிப்பின் உணர்வகை அன்றி

இடைப்பால் முதலீ றென்றிவை தம்முள் மதிக்கப் படாதது மண்டில யாப்பே

என்றார் காக்கைபாடினியார். “கொண்ட அடிமுத லாயொத் திறுவது மண்டில யாப்பென வகுத்தனர் புலவர்”

என்றார் சிறுகாக்கைபாடினியார். “கொண்ட அடிமுத லாயொத் திறுவது மண்டிலம் ஒத்திறின் நிலைமண் டிலமே’

என்றார் அவிநயனார்.

“எவ்வடி யானும் முதனடு இறுதி

99

அவ்வடி பொருள்கொளின் மண்டில யாப்பே”

என்றார் மயேச்சுரர்.

- யா. கா. 28. மேற்.

28.மேற்

அஃதேல், ‘அடிமுதலாய் வரின்' என்னாது, ‘இறின்' என்று வெறுத்திசைப்பக் கூறியது என்னை?

நேரிசை, இணைக்குறள், நிலைமண்டில ஆசிரியங்கள், முதலும் இறுதியும் ஒன்றி வந்தால், அவற்றை நேரிசை மண்டில ஆசிரியப்பா, இணைக்குறள் மண்டில ஆசிரியப்பா, நாணல் பிரம்பு ஆகியவை செறிந்த; சூரல் ஒருவகைக் கொடியுமாம். 2. தெய்வப் பெண்கள் ; தாக்கி வருத்தத்தக்கவர்.

1.