உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

15

யாப்பருங்கல விருத்திக்குப் பின்னர் எழுந்ததே காரிகையுரை என்பதை முன்னரே கண்டோம். ஆங்கே காட்டப்பெற்ற பதினோரிடங்களுள் ஒன்றிலேனும் தாம் எழுதிய உரை என்பதை அவர் சுட்டினார் அல்லர். அவருரையாயின் “யாம் உரைத்தாம் என்றோ, “யாம் கூறிய உரையான் உணர்க” என்றோ, “ஆண்டுக் கூறினாம்” என்றோ குறித்திருப்பர். அவ்வாறு குறிப்பதே பன்னூல் உரைகண்டார் உரையிடைக் காண்பதாம்.

66

சிந்தாமணிக்கு உரைகண்ட ஆசிரியர் நச்சினார்க்கினியரே தொல்காப்பியத்திற்கும் உரைகண்டார். அவர் “அகன்று பொருள் கிடப்பினும்” என்னும் நூற்பா உரையில் (தொல். செய். 210) இனிப்பல செய்யுட்கள் வருமாறு சிந்தாமணியுள் யாங் கூறிய உரைகள் பலவாற்றானும் உணர்க” என்றும், “மாட்டும் எச்சமும்” என்னும் நூற்பா உரையில் (தொல். செய். 211) “மாட்டும் எச்சமும் இன்றி உடனிலையாய் அமைந்தன பலவும் சிந்தாமணியுள் யாங்கூறிய உரையான் உணர்க என்றும், சிந்தாமணி 72 ஆம் செய்யுளில், “ஈங்குத் தன்மையை உணர்த்துதல் 'செலவினும் வரவினும்' என்னும் சூத்திரத்திற் கூறினாம் என்றும், 892ஆம் செய்யுளில், “ஆசிரியர் நண்டுந் தும்பியும் என்று தும்பியைப் பின்வைத்தது மேல் வருஞ்சூத்திரத்தில் 'மாவும் மாக்களும் ஐயறி வென்ப என்ற ஐயறிவு இதற்கும் ஏறுதற்கென்றுணர்க. இதனை 'வாராததனால் வந்தது முடித் தல்' என்னும் தந்திர உத்தியாற் கொள்க வென்று ஆண்டுக் கூறிப்போந்தாம்" என்றும் கூறுவனவற்றால் அறிக.

கலிவெண்பாவின் இலக்கணம் இரண்டு நூல்களிலும் சொல்லப் பெற்றுள்ளது.

66

"தன்தளை ஓசை தழீஇநின் றீற்றடி

வெண்பா இயலது கலிவெண் பாவே.'

99

என்பது யாப்பருங்கலம். இதற்கு உரை கூறிய விருத்தி,

“வெண்கலிப்பா எனினும் கலிவெண்பா எனினும் ஒக்கும் என்கின்றது. மேலும். “கலிவெண்பாவே என்ற ஏகார விதப்பினால் வெள்ளோசையினால் வருவதனைக் கலிவெண்பா என்றும் பிறவாற்றால் வருவனவற்றை வெண்கலிப்பா என்றும் வேறு படுத்துச் சொல்வாரும் உளர் எனக் கொள்க” என்கின்றது. தனால் விருத்தி யுரையாசிரியர் அவர் கூறியவாறு வெண் கலிப்பா எனினும் கலிவெண்பா எனினும் ஒக்கும் என்னும் காள்கையுடையவர் என்பதும் அவ்வாறு கருதாமல் இரண்டற்கும் வேறுபாடு உண்டெனக் கருதுவாரும் இருந்தனர்