உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னம்

யாப்பருங்கலம்

303

ஃது என் நுதலிற்றோ?' எனின், ஆசிரியப்பா உணர்த்தி உணர்த்துவான் எடுத்துக் கொண்டார். அவற்றுள் இச்சூத்திரம் தாழிசை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

-

(இ-ள்) மூன்று அடி ஒத்த முடிபின ஆய்விடின் அடி மூன்றாய்த் தம்முள் அளவொத்து இறுவனவாயின், ஆன்ற அகவல் தாழிசை ஆகும் - அவை அமைந்த ஆசிரியத் தாழிசை யும் ஆசிரிய ஒத்தாழிசையும் ஆம் என்றவாறு.

சீர் வ வரையறை

அடியாய் வரப்பெறும்.

இன்மையின், எனைத்துச் சீரானும்

ஆன்ற' என்று மிகுத்துச் சொல்லிய அதனால், ஒரு பொருண் மேல் மூன்று அடுக்கி வருவது சிறப்புடைத்து. என்னை?

“ஒத்த ஒருபொருள் மூவடி முடியினஃ

1

தொத்தா ழிசையாம் உடன்மூன் றடுக்கின்”

என்றார் மயேச்சுரர்.

யா. கா. 29. மேற்.

அவ்வாறே ஒரு பொருண்மேல் மூன்று அடுக்கி வருவன ஆசிரிய ஒத்தாழிசை என்றும், ஒரு பொருண்மேல் ஒன்றாயும் இரண்டாயும் மூன்று அடுக்கிப் பாருள் வேறாயும், மூன்றின் மிக்கவும் ஆசிரியத் தாழிசை என்றும் விகற்பித்துக் கூறுவர் ஒருசார் ஆசிரியர்.

வரலாறு:

ஆசிரிய ஒத்தாழிசை

26

66

சாருண் ஆடைச் சாய்கோல் இடையன்

நேர்கொள் முல்லை நெற்றி வேய

வாரார் வாரார் 3எற்றே எல்லே!’

“அத்துண் ஆடை ஆய்கோல் இடையன்

நற்கார் முல்லை நெற்றி வேய

வாரார் வாரார் எற்றே எல்லே!”

“துவருண் ஆடைச் சாய்கோல் இடையன்

  • கவர் கான் முல்லை நெற்றி வேய

வாரார் வாரார் எற்றே எல்லே!”

இவை ஒரு பொருண்மேல் மூன்று அடுக்கி, நாற்சீர் அடியான் சிறப்புடை ஆசிரிய நேர்த்தளையான் வந்த ஆசிரிய ஒத்தாழிசை.

1. ஒத்த தாழிசை, ஒத்தாழிசை. 2. இளந்தளிர்நிறம் ; ஆவது சிவப்பு. அத்து, துவர் என்பனவும் காவிநிறமே. 3. என்னே தோழி.

(பா. வே) *கவர்கார்.