உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எசு.

யாப்பருங்கலம்

ஆசிரியத் துறை

கடையதன் அயலடி கடைதபு நடையவும் நடுவடி மடக்காய் நான்கடி யாகி

இடையிடை குறைநவும் அகவற் றுறையே.

305

'இஃது என் நுதலிற்றோ?' எனின், ஆசிரியத் துறை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ.ள்) ஈற்றயல் அடி குறைந்து நான்கடியாய் வருவனவும், ஈற்றயல் அடி குறைந்து இடையந்தத்து அடி மடக்காய் நான்கடியாய் வருவனவும், இடையடி குறைந்து நான்கடியாய் வருவனவும், இடையிடை குறைந்து இடை மடக்காய் நான்கடியாய் வருவனவும் ஆசிரியத் துறையாம் என்றவாறு.

"நடுவடி மடக்காய்' என்பதனை ஒருகால் இருதலையும் கூட்டி, 'நான்கடி' என்பதனை எல்லாவற்றோடும் கூட்டி,'மத்திம தீபமாக உரைக்க.

சீர் வரையறை ன்மையின், எனைத்துச் சீரானும் அடியாய் வரப்பெறும்.

'நடையவும்' என்ற மிகையான், முதல் அயலடி குறைந்தும், நடு ஈரடி குறைந்தும் மிக்கும் வருவனவும் ஆசிரியத் துறையாம். அல்லது, ஓரடி குறைந்து வருவன ஆசிரிய நேர்த்துறை’ யும் ஈரடி குறைந்து வருவன ‘ஆசிரிய இணைக்குறட்டுறை'யும் எனப்படும்.

வரலாறு:

ஆசிரிய நேர்த்துறை)

“கரைபொரு கான்யாற்றங் கேல்லதர் எம்முள்ளி வருதி ராயின் அரையிருள் யாமத் *தடுபுலி யேறஞ்சி அகன்றுபோக நரையுரு மேறு நுங்கை வேலஞ்சும் நும்மை

வரையர மங்கையர் 3வவ்வுதல் அஞ்சுதும் 'வாரலையோ !”

தொல். செய். 175. இளம். மேற்.

6 எனவும்,

66

யா. கா. 29. மேற்.

வானகச் சோலை வரையதர் எம்முள்ளி வருதிராயின் யானைகண் டார்க்கும் *அரியேறு நும்மஞ்சி அகன்றுபோக யானையோ நுங்கைவேல் அஞ்சுக நும்மை

வானர மகளிர் வவ்வுதல் அஞ்சுதும் வாரலையோ!”

1. இடைநிலை விளக்கு. 2. கற்கள் பரவிக் கிடக்கும் வழி, மலைவழி. 3. கவர்தல் பற்றிக்கொள்ளுதல். 4. வாராதீர். (பா. வே) *அடுபுலியோ நும்மஞ்சி. *அரிமாவோ.