உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

335

மாதவர் தாதையை ;

மலர்மிசை மகிழ்ந்தனை;

போதிவர் பிண்டியை ;

புலவருட் புலவனை.

வை சிற்றெண். ‘அரையடி எண்’ எனவும் அமையும்.

எனவாங்கு,

இது தனிச்சொல்

66

அருளுடை ஒருவ! நிற் பரவுதும் எங்கோன் இருளறு திகிரியொடு வலம்புரித் தடக்கை ஒருவனை வேண்ட இருநிலம் கொடுத்த நந்தி மால்வரைச் *சிலம்பு நந்தி ஒற்றைச் செங்கோல் ஓச்சிக்

கொற்ற வெண்குடை நிழற்றுக எனவே” இது சுரிதகம்.

இது தலையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாப் பெருந்தேவ பாணி.

இஃது அல்லாதன செயன்முறையோடும் செயிற்றியத் தொடும் அகத்தியத் தோடும் ஒக்கப் பாடின இல்லை என்ப. யளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா

இடை

வருமாறு:

“பிறப்பென்னும் பிணிநீங்கப் பிரிவரிய வினைக்கடலை அறப்புணையே புணையாக மறுகரைபோய்க் கரையேறி இறப்பிலநின் அருள் புரிந்தாங் கெமக்கெல்லாம் அருளினையாய் மறவாழி ஒளிமழுங்க மனையவர்க்கும் முனையவர்க்கும் அறவாழி வலனுயிரி அருணெறியே அருளியோய் !

இது தரவு.

66

66

அருளெல்லாம் அகத்தடக்கி அடிநிழலே அடைந்தோர்க்குப் பொருளெல்லாம் நீவிளங்கிப் புகரில்லா வகையினால் இருளில்லா *வியன்ஞானம் இயம்பியதுன் இயலாமோ?

“தீதில்லா நயமுதலாத் திருந்தியநல் அளவைகளால் கோதில்லா அரும்பொருளைக் குறைவின்றி அறைந்ததற்பின் பேதில்லா இயற்காட்சி அருளியதுன் பெருமையோ?

(பா.வே) *சிலம்பநந்தி. *மனஞானம்