உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

சில்குருதிச் சீறடிமேற் சிலம்போடு கழல்நனைப்ப விளங்குபொன் நெடுவரைமேல் வெய்துறுமின் எழுந்தாங்குத் துளங்காச்சீர்ப் படையோடும் தொழிலோடும் பொலிந்தோடக் களங்கொண்டு முடியுகைத்த 'கலைமானேற் றூர்தியோய் !

இது தரவு.

“பெருந்தகைமை பிறக்கொழியப் பிடிக்கோடும் களிறேபோல் அருஞ்சமத்து நினக்குடைந்த அவுணரை நினைக்குங்காற் கரும்புருவ நுதல்வியர்ப்பக் கச்சினால் விசித்தநின் மருங்குல தளவெண்ணின் மாயமும் போலுமே !

“பேழ்வாய விறற்கூளி பின்னார்ப்ப முன்சென்று வீழ்வாயா நீயெறிந்த வீரரை நினைக்குங்காற் கேழ்கிளர் விரன்முன்கைக் கிளியிருப்ப எடுக்கில்லா மோழைமை காணுங்கால் மம்மரும் போலுமே !

66

வாளுறழ் உயர்விசும்பின் வாய்மடித்து விரற்சுட்டித் தாள்சோர நினக்குடைந்த தானவரை நினைக்குங்காற் பூளையார்ந் தெழிலெய்தப் பொறியணை புரையுநின் தோளின தளவெண்ணில் தோற்றாரும் போலுமே! இவை தாழிசை.

எனவாங்கு,

இது தனிச்சொல்.

66

கடிகமழ் பூங்குலைக் கலங்கிருந் துடுப்பிற் கார்க்காந்தள் முகைவென்றன விரல் விரலுற விரித்தமைத்து விசும்பு 'தை வந்து முலையொடு முகத்தொடு தடுமாறின பந்து; பந்தவிழ் பணிச்சென்னி கையயற் றெரீஇய *அசோகின் அந்தளிர் அணிகொண்டது நுதல்; நுதலிவர் கதுப்புக் குதவியபொன் 4கஞலின மணி; மணிமகரம் உருவாக நிகரொத்தன முத்து;

முத்துநகைக் கதிர்மின்னாக அவிர்துகிலிடைப் பூங்கண்

வை அராகம்.

1. துர்க்கை. 2. திரட்சி. 3. தடவி. 4. விளங்கின

(பா. வே) *அசோகின் அந்தளிர் அணியியற்ற அணிகொண்டது. நுதல் (மு. ப., இ.ப)

345