உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

347

அல்லா அம்போதரங்க உறுப்புக் குறைந்து, ஆறு உறுப்பும் உடைத்தாய் வந்தது எனக் கொள்க. அது வந்தவழிக் கண்டு கொள்க. அவற்றொடு முடுகியல் அடியுடை அராகம்' என்று விதப்பு அடுக்கிச் சொல்ல வேண்டியது என்னை?

66

ஒருசார் ஆசிரியர், 'தலையளவு அம்போ தரங்க ஒத்தாழி சைக் கலிப்பாவுக்கு ஓதப்பட்ட தரவும் தாழிசையும் பெற்ற அடியளவு பெற்று, தாழிசைப் பின்னர்த் தனிநிலை பெற்றும் அதன்பின் அராக அடி நான்கு முதலாக எட்டு ஈறாக, நாற்சீர் முதலாகப் பதின்மூன்று சீர் ஈறாக, இடை அந்தாதித்து, இத் துணைச் சீராலும் அராக அடிபெற்று அம்போதரங்கத்துக்கு ஓதப்பட்ட அராக அடியின்றிக் குறிலிணை பயின்ற அடி பெற்று, ‘அடுக்கிசை, முடுகியல், அராகம்' என்னும் மூன்று பெயரும் பெற்று, தேவரது விழுப்பமும் வேந்தரது புகழும் வண்ணித்து வருதலின், வண்ணகம் எனப்படும்; இடை அந்தாதித் தொடை யானும் வரப்பெறும்,” என்று இவ்வாற்றாற் சொன்னார்; அஃது இந் நூலுள்ளும் உடம்பட்டது என்பது அறிவித்தற்கு ஒரு தோற்றம் உணர்த்தியது.

66

66

'வண்ணகத் தியற்கை திண்ணிதிற் கிளப்பின்,

தரவொடு தாழிசை தலையள வெய்தித்

தாழிசைப் பின்னர்த் தனிநிலை எய்திப் பேரெண், இட்ட எண்ணுடைத் தாகி *இடையெண் வழியால் அராகவடி நான்கும் கீழள வாகப் பேரள வெட்டாச்

சீர்வகை நான்கு முதல்பதின் மூன்றா நேரப் பட்ட இடைநடு எனைத்தும் சீர்வகை முறைமையின் அராகம் பெற்றும் அம்போ தரங்கத் தராகவடி இன்றி மடக்கடி மேலே முச்சீர் எய்திக் குறிலிணை பயின்ற அசைமிசை முடுகி அடுக்கிசை முடுகியல் அராகம் என்னும் உடைப்பெயர் மூன்றிற்கும் உரிமை எய்தி விண்ணோர் விழுப்பமும் வேந்தரது புகழும் வண்ணித்து வருதலின் வண்ணகம் என்ப

அந்தாதித் தொடையினும் அடிநடை உடைமையும்

முந்தையோர் கண்ட முறைமை என்ப ப

(பா.வே.) *சிற்றெண்.