உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

367

துவும், பிரிந்திசைக்குறள் அடிகளும், அந்தாதித் தொடையாகிய அராக அடிகளும், தனிச்சொற்களும் விரவி, மிக்கும் குறைந்தும் பிறழ்ந்தும் உறழ்ந்தும், இவை இடையிடை ஆசிரியங்களும் வெள்ளைகளும் மயங்கியும் வந்தமையான், மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா எனப்படும்.

பிரிந்திசைக் குறளடியாவன, இருசீர் அடியும் முச்சீர் அடியுமாய் வரும் அம்போதரங்கம் எனக் கொள்க.

பிறரும் இவற்றுக்கு இவ்வாறே இலக்கணம் சொன்னார்.

என்னை?

66

"தரவே யாகியும் இரட்டியும் தாழிசை சிலவும் பலவும் மயங்கியும் பாவே

றொத்தா ழிசைக்கலிக் கொவ்வா உறுப்பின

கொச்சகக் கலிப்பா ஆகும் என்ப

என்றார் அவிநயனார்.

99

"தரவே தரவிணை தாழிசை சிலபல வரன்முறை பிறழ அயற்பா மயங்கியும் தனிச்சொற் பலவாய் இடையிடை நடந்தவும் ஒத்தா ழிசைக்கலி உறுப்பினிற் பிறழ்ந்தவும் வைத்தவழி முறையால் வண்ணக இறுவாய் மயங்கி வந்தவும் இயங்குநெறி முறைமையிற் கொச்சகக் கலியெனக் கூறினர் புலவர்"

யா. கா. 32. மேற்.

என்றார் காமவேளைக் கறுத்த புத்தேள் நாமம் தாங்கிய நல்லாசிரியர்.

66

"எருத்தியல் இன்றி இடைநிலை பெற்றும்,

இடைநிலை இன்றி எருத்துடைத் தாயும், எருத்தம் இரட்டித் திடைநிலை பெற்றும், இடைய திரட்டித் தெருத்துடைத் தாயும், இடையும் எருத்தும் இரட்டுற வந்தும், எருத்தம் இரட்டித் திடைநிலை ஆறாய் அடக்கியல் காறும் அமைந்த உறுப்புக் கிடக்கை முறைமையிற் கிழமைய தாயும், தரவொடு தாழிசை அம்போ தரங்கம் முடுகியல் போக்கியல் என்றிவை எல்லாம் முறைதடு மாற மொழிந்தவை யின்றி