உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

  • இடையிடை வெண்பாச் சிலபல சேர்ந்தும் மற்றும் பிறபிற ஒப்புறுப் பில்லன

கொச்சகம் என்னும் *குறியின ஆகும்”

என்றார் காக்கைபாடினியார்.

இனி ஒருசார்க் கொச்சகங்களை ‘ஒருபோகு ருபோகு' என்று வழங்குவாரும் உளர்.

மயேச்சுரராற் சொல்லப்பட்ட அம்போதரங்கமும் வண்ணகமும் என்றிரண்டு தேவ பாணியும் திரிந்து, தரவு ஒழிந்து அல்லா உறுப்புப் பெறினும், தாழிசை ஒழித்து அல்லா உறுப்புப் பெறினும், அம்போதரங்கத்துள் ஓதப் பட்ட மூவகை எண்ணும் நீங்கினும், வண்ணகத்துக்கு ஓதப் பட்ட இருவகை எண்ணும் நீங்கினும், நீங்கிய உறுப்பு ஒழியத் தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்று வருவன ‘ஒருபோகு எனப்படும்.

அவை அம்போதரங்க உறுப்புத் தழீஇயின ‘அம்போதரங்க ரு போகு' எனவும், வண்ணக உறுப்புத் தழீஇயின ‘வண்ணக ஒரு போகு' எனவும்படும். என்னை?

"கூறிய உறுப்பிற் குறைபா டின்றித் தேறிய இரண்டு தேவ பாணியும் தரவே குறையினும் தாழிசை ஒழியினும் இருவகை முத்திறத் தெண்ணே நீங்கினும் ஒருபோ கென்ப உணர்ந்திசி னோரே

என்றார் மயேச்சுரர்.

66

66

66

வரலாறு:

·

(அம்போதரங்க ஒரு போகு)

கரைபொருநீர்க் கடல்கலங்கக் கருவரைமத் ததுவாகத் திரைபொருது புடைபெயரத் திண்டோளாற் கடைந்தனையே; "முகில்பொரு துடல்கலங்க முழவுத்தோள் புடைபெயர அகல்விசும்பின் அமரர்க்கும் ஆரமுதம் படைத்தனையே; வரைபெரிய மத்தாக வாளரவம் கயிறாகத்

திரையிரியக் கடல்கடைந்து திருமகளைப் படைத்தனையே. இவை மூன்றும் தாழிசை.

66

அமரரை அமரிடை அமருல கதுவிட நுமரது புகழ்மிக மிகவிகல் அடுத்தனை;

இஃது அராகம்.

(பா. வே) *இடைநிலை. *குறிப்பின.