உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

'நாலொரு சீரால் நடந்த அடித்தொகை ஈரிரண் டாகி இயன்றவை யாவும் காரிகை *சான்ற கலிவிருத் தம்மே” என்றார் காக்கைபாடினியார்.

"நாற்சீர் நாலடி கலிவிருத் தம்மே”

என்றார் சிறுகாக்கைபாடினியார்.

- யா. கா. 33. மேற்.

கலிக்கு இனமாகிய ‘தாழிசை, துறை, விருத்தம்' என்னும் மூன்றினுள்ளும் ஒரு பொருண் மேல் மூன்றாய் வரும் தாழி சையை ஒரு புடை ஒப்புமை நோக்கி ஒரு பொருண்மேல் மூன்றாய் வரும் தாழிசையை சிறப்புறுப்பாக உடைய ஒத்தாழிசைக் கலிப்பாவின் இனம் என்றும்; ஒரு பொருண் மேல் ஒன்றாயும், இரண்டாயும், மூன்றின் மிக்கும் வரும் தாழிசையை மிக்கும் குறைந்தும் கிடத்தல் என்னும் ஒப்புமை நோக்கி, கொச்சகக் கலிப்பாவின் இனம் என்றும் ; ஐஞ்சீர் அடி கொச்சகத்துள் அருகி வரும் ஆகலின், அவ் வொப்புமையால் கலித்துறையையும் கொச்சகக் கலிப்பாவின் இனம் என்றும் ; விருத்தம் நாற்சீர் நாலடியால் வருதலின், கலி வெண்பாவின் இனம் என்றும் அவற்றால் ஒரு புடை ஒப்புமை நோக்கிப் பாச்சார்த்தி வழங்கப்படும் எனக் கொள்க.

66

(கட்டளைக் கலித்துறை)

அடி'வரை யின்றி அளவொத்தும் 2அந்தடி நீண்டிசைப்பின் கடிதலில் லாக்கலித் தாழிசை யாகும் ; கலித்துறையே நெடிலடி நான்காய் நிகழ்வது ; 3நேரடி ஈரிரண்டாய் விடினது வாகும் விருத்தம் திருத்தகு மெல்லியலே!" வ்வியாப்பருங்கலப்

கொள்க.

புறநடை யை

யா. கா 33.

விரித்து உரைத்துக்

கலிப்பாவும் அதன் இனமும் முடிந்தன.

வஞ்சிப்பா

கூ. தூங்கல் இசையன வஞ்சி, மற்றவை

ஆய்ந்த தனிச்சொலோ டகவலின் இறுமே.

இஃது என் நுதலிற்றோ?' எனின், நிறுத்த முறையானே வஞ்சிப்பாவிற்கு ஓசையும் ஈறும் ஆமாறு

உணர்த்துதல்

நுதலிற்று.

1. அளவின்றி; வரையறை இன்றி. 2. ஈற்றடி. 3. அளவடி; நாற்சீரடி. (பா. வே) *சார்ந்த.