உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

இரு சீர் அடி வஞ்சிக்கு 'ஒன்பது நிலத்தோடு முச்சீர் அடி ஞ்சி சிறப்பின்மையால், ஒரு நிலமேயாகக் கொண்டு, வஞ்சி எல்லாமாய்ப் பத்து நிலம் என்ப தொல்காப்பியனார் முதலாகிய தொல்லாசிரியர். அதுவே இந்நூலுள்ளும் துணிபு.

66

2நான்காம் குலத்திற்குப் பத்து நிலமாவன:

'ஆணைவழி நிற்றல், மாண்வினை தொடங்கல், கைக்கடன் ஆற்றல், கசிவகத் துண்மை,

ஓவா முயற்சி, ஒக்கல் போற்றல்,

மன்றிடை மகிழ்தல், ஒற்றுமை கோடல், திருந்திய அறத்திற் றீரா தொழுகல், விருந்துபுறந் தருதல் வேளாண் டுறையே”

என்று ஓதப்பட்டன.

"மன்னவன் என்ப தாசிரி யம்மே"

“வெண்பா முதலாம் நால்வகைப் பாவும் எஞ்சா நாற்பால் வருணர்க் குரிய'

என்றார் வாய்ப்பியம் உடையார் ஆகலின். இதனை விரித்து உரைத்துக் கொள்க.

வஞ்சித்தாழிசையும் துறையும்

கூக. குறளடி நான்மையிற் கோவை மூன்றாய் வருவன வஞ்சித் தாழிசை ; தனிவரின்

துறையென மொழிப துணிந்திசி னோரே

இஃது என் நுதலிற்றோ?' எனின், வஞ்சித்தாழிசையும் வஞ்சித் துறையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ.ள்) இரு சீர் அடி நான்காய் ஒரு பொருண்மேல் மூன்றாய் வருவன வஞ்சித் தாழிசை ; அச்செய்யுள் நான்கடியாய் ஒரு பொருண்மேல் ஒன்றாய் வருவது வஞ்சித் துறை என்று நூற்றுணிவு உடையார் கூறுவார் என்றவாறு.

ஒரு பொருண்மேல் ஆகிய தொடர்ச்சி ஈண்டும் கோவைக் கிளவியாற் கூறுபடுப்பது எனக் கொள்க.

1. ஓரெழுத்து ஒரு நிலமென எண்ணப்பெறும். இருசீரடி வஞ்சிக்கு 4 முதல் 12 எழுத்துக்கள் கூறியமையால் அதன் நிலம் 9 ஆயிற்று. முச்சீர் அடிவஞ்சிக்கு மற்றுமோர் எழுத்தெல்லை மிகுமாதலின் அதன் நிலம் பத்தாயிற்று.

2.

பத்து நிலத்திற்கு ஏற்ற வண்ணம் நான்காம் குலத்தின் சீர்மையெனப் பத்துப் பண்புகளைக் காட்டினார். நால் வகைப் பாக்களையும் நாற்பால் இனத்தொடும் இயைத்துக் காட்டுவது பாட்டியலார்நெறி. அவர். எழுத்துக்களையும் இவ்வாறே பகுத்தோதுவார். ஆண்டுக்

காண்க.