உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“தனிவரின்,

யாப்பருங்கலம்

துறையென மொழிப துணிந்திசி னோரே’

385

என்றாலும் கருதிய பொருளைக் கொண்டு நிற்கும்; 'வருவன என்று மற்றொரு வாய்ப்பாட்டாற் சொல்ல வேண்டியது என்னை?

ஒரு பொருண்மேல் மூன்றாய் அடி மறி ஆகாதே வருவன வற்றை வஞ்சி நிலைத் தாழிசை' என்றும்; அடி மறியாய் வருவனவற்றை ‘வஞ்சி மண்டிலத் தாழிசை' என்றும்; ஒரு பொருண்மேல் ஒன்றாய் அடி மறி ஆகாதே வருவனவற்றை வஞ்சி நிலைத் துறை' என்றும் அடி மறியாய் வருவனவற்றை வஞ்சி மண்டிலத் துறை' என்றும் வழங்குவர் ஒருசார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது.

6

அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:

(வஞ்சி நிலைத் தாழிசை)

"இரும்பிடியை இகல்வேழம்

பெருங்கையால் வெயில்மறைக்கும்

1அருஞ்சுரம் இறந்தார்க்கே

விரும்புமென் மனனேகாண் ;

“மடப்பிடியை மதவேழம்

தடக்கையால் வெயில்மறைக்கும்

இடைச்சுரம் இறந்தார்க்கே

நடக்குமென் மனனேகாண்;

“பேடையை 2இரும்போத்துத்

தோகையால் வெயில்மறைக்கும்

காடகம் இறந்தார்க்கே

ஓடுமென் மனனேகாண்'

- யா. வி. 95. மேற்.

யா. கா. 34. மேற்.

வை ஒரு பொருண்மேல் மூன்றாய் அடி மறி ஆகாதே வந்தமையால் வஞ்சி நிலைத் தாழிசை.

வஞ்சி மண்டிலத் தாழிசை வந்த வழிக் கண்டு கொள்க.

(வஞ்சி நிலைத் துறை)

“மார்வுற அணிந்தாலும்

மார்வுறாய் மணிவடமே!

1. கடத்தற்கரிய காட்டைக் கடந்தோர்க்கு. 2. பெரிய ஆண்மயில்.