உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

தோளுறச் செறித்தாளும்

தோளுறாய் கிளர்வளையே!”

இஃது ஒரு பொருண்மேல் ஒன்றாய் அடி மறி ஆகாதே வந்தமை யால், வஞ்சி நிலைத் துறை.

(வஞ்சி மண்டிலத் துறை)

66

முல்லைவாய் முறுவலித்தன ;

கொல்லைவாய்க் குருந்தீன்றன;

மல்லல்வான் மழைமுழங்கின;

செல்வர்தேர் வரவுண்டாம்"

யா. வி. 95. மேற்.

ஃது ஒரு பொருண்மேல் ஒன்றாய் அடி மறியாய் வந்தமையால், வஞ்சி மண்டிலத் துறை.

66

66

பிறவும் வந்த வழிக் கண்டுகொள்க.

பிறரும் இவ்வாறே சொன்னார். என்னை?

ஒன்றினை நான்மை உடைத்தாய்க் குறளடி

வந்தன வஞ்சித் துறையெனல் ஆகும்

'குறளடி நான்கின் கூடின வாயின்

முறைமையின் அவ்வகை மூன்றிணைந் தொன்றி வருவன வஞ்சித் தாழிசை ஆகும்'

என்றார் காக்கைபாடினியார்.

66

எஞ்சா இருசீர் நாலடி மூன்றெனில்

வஞ்சித் தாழிசை; தனிவரிற் றுறையே”

என்றார் சிறுகாக்கைபாடினியார். "இருசீர் நாலடி மூன்றிணைந் திறுவது வஞ்சித் தாழிசை; தனிவரிற் றுறையே”

என்றார் அவிநயனார்.

"இருசீர் நாலடி மூன்றிணைந் தொன்றி

வருவது வஞ்சித் தாழிசை ; தனிநின்

றொருபொருள் முடிந்தது துறையென மொழிப”

என்றார் மயேச்சுரர்.

வஞ்சி விருத்தம்

கூஉ. சிந்தடி நான்காய் வருவது வஞ்சிய

தெஞ்சா விருத்தம் என்மனார் புலவர்.

- யா. கா. 34. மேற்.

ஃது என் நுதலிற்றோ?' எனின், வஞ்சி விருத்தம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.