உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

387

இ.ள்) முச்சீர் அடி நான்கு உடைத்தாய் வரும் செய்யுள் வஞ்சி விருத்தம் என்பர் புலவர் என்றவாறு.

“சிந்தடி நான்காய் வருவது

வஞ்சியது விருத்தம் என்மனார் புலவர்”

என்றாலும் கருதிய பொருளைப் பயக்கும்; ‘எஞ்சா’ என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை?

முச்சீர் அடி நான்காய் அடி மறி ஆகாதே வருவனவற்றை வஞ்சி நிலை விருத்தம் என்றும், அடி மறியாய் வருவனவற்றை வஞ்சி மண்டில விருத்தம் என்றும் வழங்குவர் ஒருசார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது.

வரலாறு :

(வஞ்சி நிலை விருத்தம்)

  • 66

வாளா வார்கழல் வீக்கிய தாளார் தாமுடைந் தோடினார் நாளை நாணுடை மங்கைமார் தோளை நாணிலர் தோயவே"

எனவும்,

66

"முந்து கொன்ற மொய்ம்பினான் வந்து தோன்ற வார்சிலை

அம்பின் எய்து கொன்றுதாய்க்

கின்பம் எய்து வித்தபின்’

எனவும் இவை அடி மறி ஆகாதே வந்தமையால், வஞ்சி நிலை விருத்தம்.

(வஞ்சி மண்டில விருத்தம்)

“சொல்லல் 'ஓம்புமின் தோம்நனி;

செல்லல் ஓம்புமின் தீநெறி;

கல்லல் ஓம்புமின் 3கைதவம்;

மல்லல் ஞாலத்து மாந்தர்கள் !”

இஃது அடி மறியாய் வந்தமையால், வஞ்சி மண்டில விருத்தம். பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.

1.

66

(கட்டளைக் கலித்துறை)

‘குறளடி நான்கின மூன்றொரு தாழிசை; கோதில்வஞ்சித் துறையொரு வாது தனிவரு மாய்விடின் ; சிந்தடிநான்

பரிகரிமின் ; விலக்குமின். 2. குற்றம். 3. வஞ்சம். (பா. வே) * வாளார்.