உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

எண்பத்து நான்காம் இனியவற்றின் மிக்கனவும் பண்புற்றுப் 'பாத்துக் கொளல்”

எனவும் இவற்றை விரித்து உரைத்துக்கொள்க. வஞ்சிப்பாவும் அதன் இனமும் முடிந்தன.

புறநடை

கூங. மிக்கும் குறைந்தும் வரினும் ஒருபுடை

ஒப்புமை நோக்கி ஒழிந்தவும் கொளலே.

389

‘இஃது என் நுதலிற்றோ?' எனின், மேற்சொல்லப்பட்ட பாக்கட்கெல்லாம் எய்தியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இ.ள்) (மேற்சீரும் அடியும் வரையறுக்கப்பட்ட பாவும் பாவினமும் சொன்ன பெற்றியில் திரிந்து) மிக்கும் குறைந்தும் வந்தாலும், அவற்றை ஒருபுடை ஒப்புமை நோக்கி, ஒழிந்த செய்யுள்களையும் அவற்றின் பாற்படுத்து வழங்கப்படும் என்றவாறு.

வரலாறு :

66

66

(கலி விருத்தம்)

'கோழியும் கூவின ; குக்கில் *அழைத்தன; தாழியுள் நீலத் தடங்கணீர் ! போதுமினோ; ஆழிசூழ் வையத் *தறிவன் அடியேத்திக் கூழை நனையக் குடைந்தும் குளிர்புனல்

ஊழியும் மன்னுவாம் என்றேலோர் எம்பாவாய்!”

"நாற்சீர் நாலடியால் வருவது கலி விருத்தம்,' என்று வரை யறுத்துச் சொன்னார். இஃது ஐந்தடியால் வந்ததாயினும், ஒருபுடை ஒப்புமை நோக்கிக் கலிவிருத்தத்தின்பாற்படுத்து வழங்கப்படும் இதனைத் தரவு கொச்சகம் என்பாரும் உளர். இஃது அவிநயனார் காட்டிய பாட்டு.

1.

(கலி விருத்தம்)

“நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போதவிழ்ந்து கோலம் குயின்ற குழல்வாழி நெஞ்சே!

கோலம் குயின்ற குழலும் கொழுஞ்சிகையும்

3காலக் கனலெரியின் வேம்வாழி நெஞ்சே!

பகுத்து. 2. வளமான கொண்டை. 3. ஈமத்தீயாகிய நெருப்பில் வேகும்.

(பா. வே) *குரலியம்பும், குரல்காட்டும், *அண்ணல் அடிபோற்றி.