உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

391

கலிவிருத்தத்தின்பாற்படுத்து வழங்கப்படும்; கொச்சகக் கலியின் பாற்படுத்தினும் ஆம். இவை மிக்கன.

இனிக் குறைந்து வருவன, ஆசிரியப்பாவிற்கு மூன்றடிச் சிறுமை என்றார். ஆயினும், கலிக்கும் வஞ்சிக்கும் சுரிதகமாய் இரண்டடியால் வந்தனவும் உள. அவற்றையும் இவ்விலக் கத்தாற் குற்றம் இல்லை என்று வழங்குப. மருட்பாவும் _அவ்வாறே எனக் கொள்க.

வரலாறு:

(வஞ்சிப்பா)

"சுற்றும்நீர் சூழ்கிடங்கிற்

பொற்றாமரைப் பூம்' படப்பைத்

“தெண்ணீர்

நல்வயல் ஊரன் கேண்மை

அல்லிருங் கூந்தற் கலரா னாதே !”

யா. கா. 43. மேற்.

வஞ்சிப் பாவிற்கு மூன்றடிச் சிறுமை என்று வரையறுத்துச் சொன்னார். இஃது இரண்டடியால் வந்ததாயினும், ஒரு புடை ஒப்புமை நோக்கி, வஞ்சிப்பாவின்பாற்படுத்து வழங்கப்படும்.

'இரண்டடியால் வஞ்சி வரும்,' என்று எடுத்து ஓதினார், மயேச்சுரர் முதலாகிய ஒருசார் ஆசிரியர் எனக் கொள்க.

என்னை?

2“வெண்பா ஆசிரியம் கலியே வஞ்சியென நுண்பா உணர்ந்தோர் நுவலுங் காலை இரண்டும் மூன்றும் நான்கும் இரண்டும் திரண்ட அடியின் சிறுமைக் கெல்லை

என்றார் ஆகலின்.

அவர் காட்டும் பாட்டு :

(வஞ்சிப்பா)

“பூந்தண்சினை மலர்மல்கிய பொழிற்பிண்டி வேந்தன்புகழ் பரவாதவர் வினைவெல்லார்;

அதனால்

அறிவன தடியிணை பரவப்

பெறுகுவர் யாவரும் பிறவா நெறியே”

- (மயேச்சுரர்)

யா. கா. 14. மேற்.

- திருப்பாமாலை. யா. கா. 14. மேற்.

1. தோட்டம்; மருதநிலம். 2. நிரல்நிறை யாகக் கொண்டு அறிக.