உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

393

என்று நக்கீரனார் அடி நூலுள் எடுத்து ஓதப்பட்டமையாற் பெறுதும்; 'பிறநூல் முடிந்தது தானுடம் படுதல்' (நன். 14) என்பது தந்திர உத்தி ஆகலின்.

இனி, ‘ஆசிரியத்துள்ளும் கலியுள்ளும் ஐஞ்சிர் அடி வரும் என்பது எற்றாற் பெறுதும்?' எனின்,

"வெள்ளை விரவியும் ஆசிரியம் விரவியும்

ஐஞ்சீர் அடியும் உளவென மொழிப”

- தொ. பொ. 375.

என்று தொல்காப்பியனார் எடுத்து ஓதினமையாற் பெறுதும். இப்பாட்டுக்களும் செய்யுளியலுட் காட்டின எனக் கொள்க. (குறளடி வஞ்சிப்பா)

1.

“தாழிரும் பிணர்த்தடக்கைத்

தண்கவுள் இழிகடாத்துக்

காழ்வரக் கதம்பேணாக்

கடுஞ்சினத்த களிற்றெருத்தின் நிலனெளியத் தொகுபீண்டிக் கடல்மருளப் படைநடுவண் 'ஏற்றுரியின் இமிழ்முரசம் கூற்றுட்க எழீஇச்சிலைப்பக் கேளல்லவர் 2மிடல்சாய

வாள்வலியால் நிலம்வௌவி முழுதாண்டவர் வழிகாவல் குன்றுமருளச் சோறுகுவைஇப் புனல்மருளநன் னெய் சொரிந்து திருமறைமுதல்வர் வழிகாட்ட ஆகுதியின் அழலருத்திப் பல்கேள்வித் துறைபோகிய தொல்லிசையான் மீக்கூறும் கொற்கையார் குலவேறே! கூடலார் அடுபொருந !

என்றியான், ’அல்கியார்ந்த அரிக்கிணையின்

மரபுளியின் வரவிசைப்ப

நனிவிரும்பி நயனோக்கி

இனிவேண்டாநின் கிணைத்தொழிலென

எனக்கொவ்வாமைப் பெரிதருளித்

ஏற்றினது உரியை (தோலை)ச் சீவாது போர்த்த முரசம் புறம். (228). 2. வலியழிய.

3. மெலிந்தொலித்த. (பா. வே) *வெண்டளை விரவியும்.