உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

(ஆரிடச் செய்யுள்)

“வரிசை பெரிதுடையர் கட்கலமுந் தூயர் புரிசை ஒருசாரார் அம்பலமும் தண்ணீரும் தன்னிலத்த அல்ல - புரிசைக்குத்

தெற்கொற்றித் தோன்றும் திருநென் மலியேநம் பொற்கொற்றி புக்கிருக்கும் ஊர்”

எனவும்,

6

“கிடங்கிற் கிடங்கிற் கிடந்த கயலைத்

தடங்கட் டடங்கட் டளிரியலார் கொல்லார் - கிடங்கில் வளையாற் *பொலிந்தோள் வையெயிற்றுச் செவ்வாய் *இளையாட்டி கண்ணொக்கும் என்று

எனவும்,

6

“வஞ்சி வெளிய குருகெல்லாம் ; பஞ்சவன்

நான்மாடக் கூடலிற் கல்வலிது;

சோழன் உறந்தைக் கரும்பினிது; தொண்டைமான் கச்சியுட் காக்கை கரிது”

395

எனவும் வரும் இத்தொடக்கத்துப் பொய்கையார் வாக்கும், குடமூக்கிற் பகவர் செய்த வாசுதேவனார் சிந்தம் முதலாகிய ருசார்ச் செய்யுள்களும் எப்பாற்படுமோ எனின், 'ஆரிடச் செய்யுள் எனப்படும்.

ஆரிடம்' என்பது, உலகியற செய்யுள்கட்கு ஓதிய உறுப்புக்களின் மிக்கும் குறைந்தும் கிடப்பன எனக் கொள்க.

‘வரிசை பெரிதுடையர்' என்பது மிக்கது. அல்லன, மிக்கும்

குறைந்தும் வந்தன.

அவ்வாரிடச் செய்யுள் பாடுதற்கு உரியர், ஆக்குதற்கும் கெடுத்தற்கும் ஆற்றலுடையார் ஆகி, முக்காலத்துப் பண்பும் உணரும் இருடிகள் எனக் கொள்க. என்னை?

6

“உலகியற் செய்யுட் கோதிய *அளவியற் குறையவும் விதப்பவும் குறையா ஆற்றல்

இருடிகள் மொழிதலின் ஆரிடம் என்ப’

எனவும்,

1.

66

"ஆரிடச் செய்யுள் பாடுதற் குரியோர்

கற்றோர் அறியா அறிவுமிக் குடையோர்

இருடிகளாற் செய்யப்பட்ட செய்யுள். "ஆரிடத்துத் தானறிந்த மாத்திரை' ஆசாரக் கோவை −1. 2. மிகவும். (பா. வே) *பொலிந்தகை. *இளையாடன். *அளவியற்.