உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

407

இனி, முறை நிரல் நிறை, எதிர் நிரல் நிறை, மயக்க நிரல் நிறை என்று வேண்டுவாரும் உளர்.

அவற்றுள் 'முறை நிரல் நிறை வருமாறு:

(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

“பிரமன்மால் பினாகி இந்து பேரிருள் செம்மை பீதம் விரவலில் வெண்மை வட்டம் மிக்கமுக் கோணம் நாற்கோண் வரிசிலை வாயு வன்னி மாநிலம் வருண ராசன்

பரலவம் எடுத்தல் ஏந்தல் இழித்தலே கெடுத்த *லாறே

எனவும்,

66

"இருணிறம் வளையம் வாயு எடுப்புதல் பிரமன் யஃகான் எரிதிரி கோணம் செம்மை ஏற்றன்மால் இரேபை யாகும் பெருநிலம் சதுரம் பீதம் பினாகி கோள் இழைத்த லஃகான் வருணன்விற் றவளம் விந்து மாற்றுதல் வகாரம் வித்தே”

எனவும்,

266

(தரவு கொச்சகம்)

'புள்ளிப் பொறியே சுடர்நந்தி போர்க்குலிசம் வள்ளிதழ்த் தாமரையும் வைக்கவம் மண்டலத்தே மண்டலத்தைப் புள்ளின் வதன முதலாகக் கொண்டழியச் சிந்திப்பக் குன்றும் கொடுவிடமே”

எனவும்,

66

(அறுசீர் ஆசிரிய விருத்தம்) அடிமுழந் தாளோ டுந்தி அணிமிட றாதி யாகப் படுபனி கந்த முந்நீர் பருதியஞ் சனமென் றின்ன வடிவுடை வயின தேயன் வலிமிகு நகுலன் குக்கில் இடியுரு மேற்றோ டின்ன இயைந்தவ னாகத் தானே'

எனவும்,

(குறள் வெண்பா) “முறிமேனி ; முத்தம் முறுவல் ; வெறிநாற்றம் ; வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு

எனவும்,

66

(குறள் வெண்பா)

- திருக்குறள். 1113.

“வாய்பவளம் ; வேய்தோள் ; மருங்குல் இளவஞ்சி ஆய்மலர்க் கோதை யவட்கு

எனவும்,

1.

2.

وو

சொல்லையும் பொருளையும் நிரலே நிறுத்தி நேரே பொருள் கொள்வது. இஃது இரண்டடி எதுகைச் செய்யுள். (பா. வே) *லாமே.