உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

தண்ணார மார்பிற் றமிழ்நர் பெருமானைக்

கண்ணாரக் காணக் கதவு

417

முத்தொள்ளாயிரம். நேமிநாதம், 92, மேற்.

என்பது 'கதவு' என்பதனோடு

உடை மையின் 'பூட்டுவிற் பொருள்

இதனுள், 'திறந்திடுமின்

பொருள் நோக்கு

கோள் ஆயிற்று.

(சு) புனல் யாற்றுப் பொருள்கோள் வருமாறு:

66

(இன்னிசை வெண்பா)

"அலைப்பான் பிறவுயிரை ஆக்கலும் குற்றம்; விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலும் குற்றம்; சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்; கொலைப்பாலும் குற்றமே ஆம்

நான்மணிக்கடிகை, 26.

ஃது அடிதோறும் பொருள் அற்று மீளாது சேறலின், 2‘புனல் யாற்று பொருள்கோள் ஆயிற்று.

(எ) அளை மறி பாப்புப் பொருள்கோள் வருமாறு:

66

(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

'தாழ்ந்த உணர்வினராய்த் தாளுடைந்து

தண்டூன்றித் தளர்வார் தாமும்

சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து

நாற்கதிக்கட் சுழல்வார் தாமும்,

மூழ்ந்த பிணிநலிய முன்செய்த

வினையென்றே முனிவார் தாமும்

வாழ்ந்த பொழுதினே வானெய்தும்

நெறிமுன்னி முயலா தாரே”

யா. கா. 43. மேற்.

இதனுள், 'வாழ்ந்த பொழுதினே வானெய்தும் நெறி முன்னி முயலாதார்' என்னும் இறுதிச்சொல் முதலும் இடையும் சென்று மறித்துப் பொருள் கோடலின், 3அளை மறி பாப்புப் பொருள்கோள் ஆயிற்று.

1. பூட்டுவிற் பொருள்கோளை ஓர் அணியாகக் கொள்வார் மாறனலங்காரமுடையார். பூட்டுவில் என்பது விற்பூட்டு எனவும் பெறும். செய்யுளின் ஈற்றுச்சொல் முதற் சொல்லுடன் தொடர்ந்தமைதல் காண்க.

2. யாற்று நீர்ப் பொருள்கோள், ஆற்றொழுக்குப் பொருள்கோள், யாற்று வரவுப் பொருள்கோள் எனவும் இது பெயர்பெறும்.

3.

அளை- புற்று. புற்றுள் சுருண்டு கிடக்கும் பாம்புத் தலைபோன்று பொருள் அமைதியுடையது. எச்சங்கள் பலவாகி ஒரு பயனிலை கொள்ளும்.