உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(அ) தாப்பிசைப் பொருள்கோள் வருமாறு:

(குறள் வெண்பா)

“உண்ணாமை உள்ள துயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யா தளறு

>

திருக்குறள், 255.

இஃது, ‘ஊன் உண்ணாமை உள்ளது உயிர்நிலை,' எனவும், ‘ஊன் உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு,' எனவும் நடு நின்ற ஊன்' என்னும் சொல்லே முதலும் இறுதியும் நின்று பொருள் கொண்டமையால், 'தாப்பிசைப் பொருள்கோள் ஆயிற்று.

(கூ) கொண்டு கூட்டுப் பொருள்கோள் வருமாறு:

66

(நேரிசை ஆசிரியப்பா)

'குவியிணர்த் தோன்றி ஒண்பூ அன்ன

தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல் நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும் பிள்ளை வெருகிற் கல்கிரை ஆகிக் கடுநவைப் படீஇயரோ நீயே; நெடுநீர் யாணர் ஊரனொடு வதிந்த

குறுந்தொகை, 107.

ஏம இன்றுயில் எடுப்பி யோயே!” இதனுள், 'தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்' என்ப தனையும், கடுநவைப் படீஇயரோ நீயே,' என்பதனையும், இன்றுயில் எடுப்பியோய், என்பதனையும் கூட்டிப் பொருள் கொண்டமையால், 2கொண்டு கூட்டுப் பொருள்கோள் ஆயிற்று. (இன்னிசை வெண்பா)

6

3"தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல் வெண்கோழி முட்டை உடைத்தன்ன மாமேனி

அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே

வங்கத்துச் சென்றார் வரின்

""

நேமிநாதம், 92. மேற். யா. கா. 43. மேற்.

இதனுள், 'அஞ்சனத் தன்ன பைங்கூந்தல்' எனவும், தெங்கங்காய் போலத் திரண்டு உருண் வெண்கோழி

முட்ட

உடைத்தன்ன பசலை

""

6 எனவும் சொற்களைக்

1. தாம்பு கயிறு தாப்பு என வலித்தல் விகாரமாயிற்று. கயிற்று ஊசல்போல, ஓரிடத்து நின்ற சொல் முன்னும் பின்னும் சென்று பொருளுறக் கூடுவது தாப்பிசையின் இயல்பு. நெறியின்றிக் கிடக்கும் சொற்களை நெறிப்படக் கொண்டு கூட்டிக் காணுமாறு நிற்பது கொண்டு கூட்டு. இது பாடல் முழுவதும் தழுவுவது ஆகலின் சுண்ணமொழி மாற்று, அடிமறிமொழி மாற்று இவற்றினும் வேறுபடல் அறிக.

2.

3. இதனை மொழி மாற்றிற்கு எடுத்துக் காட்டாகக் காட்டினர் நேமி.