உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

419

கொண்டு கூட்டிப் பொருள் கொண்டமையால், இதுவும் கொண்டு கூட்டுப் பொருள்கோள் ஆயிற்று.

66

(நேரிசை வெண்பா)

“ஆரிய மன்னர் பறையின் எழுந்தியம்பும்

பாரி பறம்பின்மேற் றண்ணுமை - காரி

விறன்முள்ளுர் வேங்கை வெதிர்நாணுத் தோளாய் நிறனுள்ளூர் உள்ள தலர்”

யா. கா. 43. மேற். இதனுள், 'வெதிர் நாணும் தோளாய்!' என்றும், 'நிறன் வேங்கை' என்றும், ‘அலர் ஆரிய மன்னர் பறையின் எழுந் தியம்பும்’ என்றும் சொற்களைக் கொண்டு கூட்டிப் பொருள் கொண்டமையால், இதுவும் அது. பிறவும் அன்ன. கொண்டு கூட்டுழித் தன்னுள்ள சொல்லாதல். பொருளாதல் கொணர்ந்து கூட்டிச் சொல்லப்படுவனவும் தன் இல்லாத சொல்லாதல் பொருளாதல் கொணர்ந்து கூட்டிச் சொல்லப்படுவனவும் என நான்காம் அவை வந்தவழிக் கண்டு கொள்க.

நிரல் நிறை, சுண்ணம், அடி மறி மொழி மாற்று, அடி மொழி மாற்று என்னும் இந்நான்கினோடும், பூட்டு வில், புனல் யாறு, தாப்பிசை, அளை மறி பாப்பு, கொண்டு கூட்டு என்னும் இவ்வைந்து செய்யுட் பொருள்கோளும் உறழ, இருபதாம். அவை வந்த வழிக் கண்டு கொள்க.

இருபது வகையானும் காட்டினார் அவிநயனார் எனக்

கொள்க.

1

ஆதித் தீபகம், 2அந்தத் தீபகம், 3மத்திமத் தீபகம், 4சிங்க நோக்கு, 5தேரைத் தத்து, “பாசி நீக்கு, 'ஒரு சிறை நிலை என்று இவ்வகையாற் பொருள்கோள் சொல்வாரும் உளர். அவையும் அவற்றுள்ளே அடங்கும் எனக் கொள்க. அவை எல்லாம் வல்லார்வாய்க் கேட்டு உணர்க. ஈண்டு உரைப்பிற் பெருகும்.

2

அறுவகைப்பட்ட சொல்லின் விகாரமாவன :

66

“அந்நாற் சொல்லும் தொடுக்குங் காலை

வலிக்கும்வழி வலித்தலும், மெலிக்கும்வழி மெலித்தலும்,

1, 2, 3,. இவற்றை விளக்கணியின்பாற்படுத்துவர். தண்டி. 39.

4. அரிமாநோக்கம் என்னும் சூத்திரநிலைப்பாற்படுத்துவர். நன். 19.

5. தவளைப்பாய்ந்து என்னும் சூத்திரநிலைப்பாற்படுத்துவர். நன். 19.

6. சொற்றோறும் அடிதோறும் பொருளேற்று நிற்பது. இறைய. 56.

7. ஒரு பாட்டினகத்துச் சொல்லப்பட்ட பொருள் ஒருவழி நிற்பது. இறைய. 56.