உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

எருத்தந் திருந்த இலங்கிலைவேல் தென்னன் திருத்தார்நன் றென்றேன் தியேன்”

421

- யா. வி. 62. மேற்.

யா. கா. 43. மேற்.

தனுள் “தீயேன்' எனற்பாலதனைத் ‘தியேன்' என்று

குறுக்கும் வழிக் குறுக்கியவாறு.

பிறவும் அன்ன. ‘அறுவகைப்பட்ட சொல்லின் விகாரமும்’ என்ற உம்மையால்; 'தலைக்குறைத்தலும், இடைக்குறைத் தலும், கடைக் குறைத்தலும் என என இவையும் வரலாற்று முறைமையோடும் கூட்டி வழங்கப்படும்.

வரலாறு:

“மரையிதழ் புரையும் அஞ்செஞ் சீறடி

43.மேற்

- யா. கா. 43. மேற்.

இதனுள், 'தாமரை” எனற்பாலதனை ‘மரை” என்று

தலைக் குறைத்து வழங்கியவாறு “வேதின வெரிநின் ஓதி முது போத்து” இதனுள், 'ஓந்தி' எனற்பாலதனை குறைத்தவாறு.

“அகலிரு விசும்பின் ஆஅல் போல வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை” இதனுள் ‘ஆரல்' எனற்பாலதனை குறைத்தவாறு.

-குறுந்தொகை, 140

தி' என்று இடைக்

மலைபடுகடாம் 100-101

ஆல்' என்று என்று இடை டக்

யா. கா. 43. மேற்.

“நீலுண் துகிலிகை கடுப்பப் பலவுடன்” இதனுள், 'நீலம் உண் துகிலிகை' எனற்பாலதனை ‘நீலுண் துகிலிகை என்று கடைக்குறைத்தவாறு. பிறவும் அன்ன.

3

3

‘எழுத்தல் இசையை அசைபெறுத் தியற்றலும்' என்பது, எழுத்து அல்லாத 2முற்கும், வீளையும், இலதையும், அநுகரணமும், முதலாக உடையன செய்யுளகத்து வந்தால், அவற்றைச் செய்யுள் நடை அழியாமை, அசையும் சீரும் தளையும் அடியும் தொடையும் பிழையாமைக் கொண்டு வழங்குதலும் என்றவாறு.

1. இவற்றைத் தொகுத்தல் விகாரத்துள் அடக்குவாரும் உளர்.

2. முக்குதல், சீழ்க்கை அடித்தல், கோழை வெளிப்படுத்தல்.

3.

வேறொன்று செய்வதுபோலச் செய்யும் ஒலிக்குறிப்பு. (பிங்) பறவை கத்துவது போலவும், விலங்கு ஒலிசெய்வது போலவும் செய்வது முதலியனவாம்.